70 கிலோ எடை குறைத்த ஆனந்த் அம்பானி !

1 minute read
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் மூத்த மகன், ஆனந்த் அம்பானி.
இவருடைய படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அப்படி என்ன அந்த படத்தில் விசேஷம் என்கிறீர்களா?

ஹைப்போ தைராய்டு பிரச்னை காரணமாக உடல் எடை அதிகரித்த நிலையில் காணப்பட்டார் ஆனந்த் அம்பானி. கிட்டத்தட்ட 140 கிலோ வரை அவரது உடல் எடை இருந்தது.

இதனால் இவர் உருவத்தை வைத்தும் மும்பை இண்டியன் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் உட்கார்ந்து இருப்பதை கொண்டும் மீம்ஸ்களை உருவாக்கி தெறிக்க விட்டனர் நமது நெட்டிசன்கள். 

இப்போது 140 கிலோவிலிருந்து 70 கிலோ எடை குறைத்து ஸ்லிம் ப்யூட்டியாக வலம் வரும் அவரது தற்போதைய ஃபோட்டோக்கள்தான் சமீபத்தில் வைரல் ஆனது.

சனிக்கிழமை சோம்நாத் ஆலயத்திற்கு வந்திருந்த ஆனந்த் அம்பானியை கண்டு ’அவரா இவரு?’ என்று ஆச்சரியமடைந்தவர்கள் பலர். 

எடை குறைத்து சிக் என்று வந்திருந்த அவர், அமெரிக்காவை சேர்ந்த நிபுணர் ஒருவரின் நேரடி கண்காணிப்பில் இருந்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
Tags:
Today | 19, April 2025
Privacy and cookie settings