தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 8.39 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
காப்பி அடிப்பவர்களை பிடிக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏப்ரல் 1ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பள்ளி மாணவர் களை தவிர 42,347 தனித்தேர்வர்கள் என மொத்தம் இந்தாண்டு 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
புதுச்சேரியில் 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 421 மையங்கள் அமைக்க ப்பட்டுள்ளன. தமிழ் வழியில் படித்த 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
106 கைதிகள் தேர்வு எழுது கிறார்கள்
இதுதவிர 106 சிறைக் கைதிகள் பாளையங் கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப் பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுது கிறார்கள்.
தேர்வில் 'காப்பி' அடிப்பதை கண்காணிப் பதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை நியமனம் செய்ய ப்பட்டிருக்கிறது.
செல்போனுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. 'பிட்' அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல்
மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர் களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
Tags: