"A" என்ற எழுத்தே இல்லாமல் ஒரு பதில் !

"A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா ? - பேரறிஞர் அண்ணாவிடம் டெல்லி பத்திரிகை நிருபர் கேள்வி !


சுமார் 1965ம் ஆண்டு வாக்கில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராளுமன்ற உறுப்பி னராக இருந்தார்.

அப்போது பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த சமயம் அவர் டெல்லியில் இருந்தார்.

அண்ணா டபுள் M.A. படித்து, ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றவர். பாராளு மன்றத்தில் சர்வ சாதாரண மாக அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.

அந்தசமயம் ஒரு இளவயது டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர் பாராளு மன்றத்தை விட்டு வெளியே வந்த அண்ணா விடம்,

"நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்... "என்றார். அண்ணாவும் பேட்டி கொடுக்க சம்மதித்து பேட்டிக்கு தயாரானார்.

நிருபர் துணிச்சலாக "உங்களிடம் எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர் களாமே...

நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?..." என்றார்.

அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில்.

உடனே நிருபர் கேட்டார்." ஆங்கிலத்தில் 100 வார்த்தை களுக்கு "A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?..." என்றார்.


உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல், "தம்பி, 1 முதல் 100 வரை ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.

கடைசியில் STOP என்று ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளுங்கள்..." என்றார்.

இந்த பதிலை கொஞ்சமும் எதிர் பார்க்காத நிருபர் உடனே அண்ணா விடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அன்று தான் நிறைய பேருக்கு தெரிய ஆரம்பித்தது 0 முதல் 99 வரை ஆங்கிலத்தில் "A" என்ற எழுத்தேவராது என்று
Tags:
Privacy and cookie settings