அசாம் மற்றும் மேற்கு வங்க மாநில தேர்தலுக்கான வேட்பு மனு இன்று !

அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் என 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 
மேற்கு வங்காளம் 294 சட்டசபை தொகுதிகளை கொண்டது. மேற்கு வங்க தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெறும், அதிலும், முதல்கட்ட தேர்தலின்போது, 

2 கட்ட வாக்கு பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி தெரிவித்திருந்தார். அதாவது 6 கட்ட தேர்தல் என்றாலும் 7 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. இன்று தொடங்கி மார்ச் 18ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதி மார்ச் 21 ஆகும்.

மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 4-ம் தேதி நடைபெற உள்ளது.அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாக ஓட்டு பதிவு நடைபெற உள்ளது. 

மேற்கு வங்காளத்தில் 6 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings