ஒரு நாளைக்கு 80,000 சம்பாதிக்கும் பிச்சைக்காரர் !

பிரித்தானிய பிரதமருக்கு சமமாக ஒரு நாளில் 80,000 ரூபாய் வருமானம் ஈட்டும் பிச்சைக்காரர் ஒருவர் நகரில் வலம் வந்துக் கொண்டு இருப்பதாக அந்நாட்டு கவுன்சிலர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். 
ஒரு நாளைக்கு 80,000 சம்பாதிக்கும் பிச்சைக்காரர் !
இங்கிலாந்தில் உள்ள Wolverhampton நகர கவுன்சிலரான ஸ்டீவ் ஈவன்ஸ் நேற்று வியக்கத்தக்க தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘Wolverhampton நகரில் வசதிப்படைத்த பிச்சைக்காரர் ஒருவரின் வருமானத்தை மற்ற கவுன்சிலர் ஒருவர் மூலம் தெரிந்துக் கொண்டேன். 

பெயர் வெளியிடப்படாத அந்த பிச்சைக்காரர் ஒரு நாளில் மட்டும் 500 பவுண்ட் வருமானம் ஈட்டுகிறார். 

ஒரு வாரத்திற்கு 2,500 அவுண்ட் அரசாங்த்திற்கு வரி செலுத்தாத இவரது ஆண்டு வருமானத்தை கணக்கிட்டால், 12 மாதங்களில் 1,30,000 பவுண்ட் வருமானம் ஈட்டுகிறார். 

அதாவது, பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் ஆண்டு வருமானத்தை விட 12,000 பவுண்ட் மட்டுமே குறைவாக பெறுகிறார்.

அதே சமயம், பிச்சை எடுக்கும்போது ‘தனக்கு வீடு, வாசல் எதுவும் இல்லை’ எனக்கூறி பிச்சை எடுக்கிறார். ஆனால், உண்மையில் பல லட்சம் மதிப்பிலான வீட்டில் இவர் ரகசியமாக தங்கி வருகிறார். 
ஷொப்பிங் செல்ல வரும் வசதிப்படைத்த, அதே சமயம் இளகிய மனம் உள்ளவர்களை குறி வைத்து இவர் பிச்சை எடுப்பதால், ஒரு நாளுக்கு 500 பவுண்டை விட கூடுதலாகவும் கிடைக்கிறது. 

இதுபோன்ற மக்களின் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்தி அதிகளவில் வருமானம் ஈட்டும் இது போன்ற பிச்சைக்காரர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

ஒரு பிச்சைக்காருக்கு நாட்டின் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானத்தை விட கூடுதலாக கிடைக்கும் என்றால், இந்த பிச்சை எடுக்கும் தொழிலை நிச்சயமாக ஒழிக்க முடியாது. 

மேலும், பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அது அரசிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தும். 
எனவே, முக்கிய நகரங்களில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்து தகவல்களை சேகரித்து அவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஸ்டீவ் ஈவன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings