பொதுவாக மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கும். இந்த மீனில் ஒமேகா-3 அதிகம் இருப்பதோடு, கலோரிகள் குறைவு மற்றும் வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
எனவே விலை மலிவில் கிடைக்கும் இந்த மீனை சாதாரணமாக நினைத்து விடாமல், வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வாருங்கள்.
இதய ஆரோக்கியம் :-
நெத்திலி மீனில் பாலி-அன்- சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கி யத்தை மேம்படுத்தும்.
எப்படி யெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
செல்லுலார் பழுதுபார்த்தல் :-
செல்லுலார் மற்றும் இணைப்புத் திசுக்களின் வளர்ச்சிக்கும், பழுது பார்க்கவும் தேவையான புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.
சரும ஆரோக்கியம் :-
நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி அமிலங் களுடன், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கி யத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன
எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப் படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.
வலிமையான பற்கள் மற்றும் எலும்புகள் :-
நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்பு களுக்கு மிகவும் அத்தியாவ சியமான ஓர் சத்து.
அது மட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கி யத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
கண் ஆரோக்கியம் :-
நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கி யத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனை களைத் தடுக்கலாம்.
எடை குறைவு :-
நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.