சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதன் பேட்டரியின் சக்தியை நீண்ட நேரத்திற்கு சேமித்துக் கொள்ள முடியும்.
அவ்வாறான வழிமுறைகளில் ஒன்றாக பேட்டரியின் சக்தியை சேமிக்கக்கூடிய செயலிகளை எமது ஸ்மார்ட் போனில் நிறுவி பயன்படுத்தலாம்.
இருப்பினும் பெரும் பாலானவர்களின் கருத்து செயலிகளை நிறுவுவதன் மூலம் பேட்டரியின் சக்தியை சக்தியை சேமிக்க முடியாது.
மாறாக அவைகள் பேட்டரியின் சக்தியை மேலும் விரயமாக்குகின்றன என்பதாகும்
எனினும் உண்மை அவ்வாறல்ல.....!
சில செயலிகளை பயன்படுத்தி நாம் எமது ஸ்மார்ட் போனின் சக்தியை சேமிக்க முயற்சிக்கும் போது அந்த செயலிகளால் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாடு தற்காலிகமாக தடை செய்யப்படும்.
எனவே அவைகள் குறுகிய நேரத்திலேயே மீண்டும் துவங்க ஆரம்பித்து விடுகின்றன. ஆகவே உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி மீண்டும் காலியாக துவங்குகின்றது.
பின்புலம் - Background
என்றாலும் சில செயலிகளை பயன்படுத்தி ஸ்மார்ட் போனின் பேட்டரி சக்தியை சேமிக்க முயற்சிக்கும் போது அவைகள் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முற்றிலுமாக தடை (Force Stop) செய்து விடுகிறது.
எனவே அவைகள் இணையத்துடன் தானாக தொடர்புபடவோ பின்புலத்தில் இயங்கவோ செய்யாது எனவே உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரியை நீண்ட நேரத்திற்கு சேமித்துக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு சட்ஆப் செயலி
அந்த வகையில் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய உதவுகின்றது சட்ஆப் எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.
சட்ஆப் செயலியை பயன்படுத்துவது எப்படி?
இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு கீழே வழங்கப் பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவிக் கொள்ளுங்கள்.
இனி இந்த செயலி உங்கள் ஸ்மார்ட் போனில் செயற்பட உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் Service எனும் வசதியை இந்த செயலிக்கு செயற் படுத்துதல் வேண்டும்.
இதனை குறிப்பிட்ட செயலியின் அறிவுறுத்தலின் படி Setting பகுதிக்கு சென்று Accessibility ===> Service என்பதில் தரப்பட்டிருக்கும் ShutApp என்பதை சுட்டுவதன் மூலம் செயற்படுத்திக் கொள்ளலாம்.
பின் இந்த செயலியில் தோன்றும் Shut என்பதை அழுத்த உங்கள் ஸ்மார்ட் போனின் பின்புலத்தில் இயங்கும் அனைத்து செயலிகளும் மீள துவங்க முடியாதவாறு முற்றிலுமாக தடை செய்யப்படும்.
இனி உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு நிலைத் திருப்பதை உணர்வீர்கள்.
குறிப்பு:
இவ்வாறு நீங்கள் தடைசெய்யும் செயலிகளில் இருந்து நோட்டிபிகேஷன் எதுவும் தோன்ற மாட்டாது.
இருப்பினும் வைபர், வாட்ஸ்ஆப் மற்றும் ஏனைய செயலிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை வழமை போல் நோட்டிபிகேஷன் ஆக பெற வேண்டும்
எனின் குறிப்பிட்ட செயலிகளை மாத்திரம் சட்ஆப் செயலியின் Whitelist என்பதில் இணைத்துக் கொள்ளலாம்.
இதற்கு சட்ஆப் செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Whitelist என்பதை அழுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்டது
போன்று முற்றாக தடை செய்யப்படாமல் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டிய செயலிகளை உள்ளிட்டுக் கொள்ளலாம்.
மேலும் இந்த செயலியில் இருக்கும் Magic Ball என்பதை செயற்படுத்துவதன் மூலம் ஒரு சிறிய வட்ட அடையாளத்தில்
பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உங்கள் ஸ்மார்ட் போனில் காண்பிக்கப்படும்.
பின் இதன் எணிக்கை அதிகரிக்கும் போது உடனடியாக தேவையற்ற செயலிகளின் செயற்பாட்டை தடை செய்துகொள்ள முடியும்.
இவைகள் தவிர உங்கள் பாக்கெட்டில் ஸ்மார்ட் போனை இட்டவுடன் தேவையற்ற செயலிகள் தானாக தடை செய்யப்படும் வகையிலான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.
எனினும் இந்த வசதியை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனில் சட்ஆப் செயலியில் தரப்பட்டுள்ள Invite என்பதன் மூலம்
இந்த செயலியை மூன்று நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் அல்லது கட்டணம் செலுத்தி இதன் முழுமையான பதிப்பை பெற வேண்டும்.
Tags: