நடிகர் சங்கத்தில் ஊழல் நடைபெற்றதாக கொடுக்கப்பட்ட புகாருக்கு, நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் காவல் ஆணையரிடம் விளக்கம் அளித்தார்
நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் சார்பில் பூச்சி முருகன் இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
சரத்குமார் உள்ளிட்ட நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள், வரவு செலவு கணக்கில் பலகோடி ரூபாய் ஊழல் புரிந்ததாக அதில் கூறியிருந்தார்.
சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த புகாரை யடுத்து சரத்குமார், காவல் ஆணையரிடம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இந்த புகாரை யடுத்து சரத்குமார், காவல் ஆணையரிடம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்த விளக்க கடிதத்தில், பலகோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிற நடிகர் சங்க நிர்வாகிகள் என்னிடமே விளக்கம் கேட்டிருக்கலாம்.
நடிகர் சங்க கணக்கு வழக்குகள் அனைத்தும் முறையாக தணிக்கை அலுவலர் மூலம் சரி பார்க்கப்பட்டே ஒப்படைக்கப் பட்டது. புகாரில் தெரிவித்துள்ளபடி நான் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை.
என் மீது கொடுக்கப் பட்டுள்ள இந்த புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறப்பட்டுள்ளது.
Tags: