என்னையும், குடும்பத்தையும் நேசிப்பவர் கணவராக வேண்டும்.. பூர்ணா !

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் பூர்ணா. முதலில் மலையாளப் பட உலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார்.
என்னையும், குடும்பத்தையும் நேசிப்பவர் கணவராக வேண்டும்.. பூர்ணா !
தனது திரை உலக அனுபவம் பற்றி பூர்ணா கூறுகிறார். ‘‘நான் முதலில் மலையாள படங்களில் அறிமுகமானேன். 

அங்கு எனக்கு வாய்ப்பு கிடைத்த போது நல்ல பாத்திரம் கொடுத்து இருப்பதாக கூறுவார்கள். அதை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவேன். ஆனால் சிறிய பாத்திரங்கள் கொடுத்து விடுவார்கள்.

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டதால் வேறு வழியில்லாமல் சாதாரண சிறு சிறு வேடங்களில் நடிக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோல் அங்கு நான் பலமுறை ஏமாந்து விட்டேன். தமிழ், தெலுங்கு படங்களில் எனக்கு நல்ல பாத்திரங்கள் அமைந்தன. 

சமீபத்தில் நான் தெலுங்கில் ஒரு பேய் படத்தில் நடித்தேன். இந்த படத்தை பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் இறந்து விட்டதாக புரளி கிளப்பி விட்டார்கள். 
என்னையும், குடும்பத்தையும் நேசிப்பவர் கணவராக வேண்டும்.. பூர்ணா !
தமிழ் திரைப்படங்களில் மனதுக்கு பிடித்த வேடங்களில் நடிக்கிறேன். இந்த ஆண்டு எனக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று எனது குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடுகிறார்கள். 

என்னையும், என் குடும்பத்தையும் நேசிக்கும் ஒருவர் தான் எனக்கு கணவராக வர வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்.
Tags:
Privacy and cookie settings