நீர் வறட்சியினால் மாற்றங்கள் !

உணவு அருந்தாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் பருகாமல் இரண்டு நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. 



நம் உடலில் அனைத்து பாகங்களும் நன்கு செயல்பட வேண்டும் எனில் நீர் மிகவும் அவசியம். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டியது கட்டாயம். ஏனெனில், நீர் வறட்சி காரணமாக இரத்தம் தடிமனாக ஆரம்பிக்கிறது. 

இதன் காரணமாக இரத்த ஓட்டம் தடைப்பட்டு உடல் பாகங்களில் செயல்திறன் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, சரியான நேர இடைவேளையில் சரியான அளவு நீர் பருக மறக்காதீர்கள். 

இனி, நீர்வறட்சி ஏற்படுவதால் உடலில் ஏற்படும் விசித்திரமான மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்... நீர்வறட்சி ஏற்படுவதால் இரத்தத்தின் அளவும், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவும் குறைகிறது. இதனால் மூளையில் வறட்சி ஏற்பட துவங்கும். 

மேலும் இவற்றால் செரோடோனின் சுரப்பியில் குளறுபடி நேர்ந்து தலைவலி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. நீர்வறட்சியால் நரம்பியல் மண்டலத்திலும் தாக்கங்கள் ஏற்படுகின்றன. 

கவனக் குறைபாடு, வேலை செயல்திறன் குறைபாடு போன்றவை ஏற்படவும் இது காரணியாக இருக்கிறது. நீங்கள் சரியான அளவு நீர் குடிக்காமல் இருப்பதால் உங்கள் குடலியக்கம் பாதிக்கும். 

இதனால் மலச்சிக்கல் வெகு விரைவில் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, செரிமானம் நன்கு செயல்பட வேண்டும் எனில் நீங்கள் சரியான அளவு நீர் சரியான இடைவேளையில் பருக வேண்டும்.



உடலில் நீர் அளவு குறையும் போது இரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் உடல் முழுதும் இரத்தம் சீரான வேகத்தில் செல்வதில்லை. இதன் காரணமாக தசைப்பிடிப்புகள் ஏற்படலாம். 

உங்கள் சருமம் மென்மையாக இருக்க வேண்டும் எனில் நீங்க கிரீம் தான் பூச வேண்டும் என்றில்லை. சரியான அளவு நீர் பருகினாலே போதுமானது. நீர் வறட்சி காரணமாக உங்கள் மனநிலை சோர்வாக உணர்வீர்கள். 

ஏதோ மேகமூட்டம் ஏற்பட்டது போல உங்கள் மனநிலை மாற ஆரம்பிக்கும். எதையும் சரியாக யோசிக்க முடியாமல் போகும். உங்கள் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறியே இந்த உடல் சோர்வு தான். 

விளையாட்டு வீரர்களுக்கு இது மிக நன்றாகவே தெரியும். உடலில் நீர்வறட்சி ஏற்படுவதால் வாயில் உற்பத்தியாகும் எச்சில் குறைய ஆரம்பிக்கும். எச்சில் ஒரு ஆண்டி-பாக்டீரியா ஆகும். 



எனவே இது குறைய ஆரம்பிப்பதால் உணவு உண்ணும் போது பல் இடுக்குகளில் உருவாகும் பாக்டீரியாக்கள் அழியாமால் இருந்து வாய் துர்நாற்றம் அதிகரிக்கின்றன.

 உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் இரத்தம் தடிமனாக மாறுகிறது. இதனால் இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். 

இரத்த ஓட்டத்தின் வேகம் குறைவதால் தன்னைப் போல இதயத்தின் செயல்பாடு கடினமாக ஆரம்பிக்கும். சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் உடல் பயிற்சி செய்தால் உடலில் எதிர்மறை தாக்கங்கள் தான் ஏற்படும்.
Tags:
Privacy and cookie settings