லஞ்சம் கொடுக்கும் மக்கள் மீதும் வழக்கு.. சட்டம் !

தேர்தல் வந்துவிட்டால் சின்ன சின்ன அரசியல் கட்சிகள் பெரிய கட்சிகளை சீட் கேட்டும், பணம் கேட்டு மறைமுகமாக, நேரடியாக மிரட்டுவதை போல தேர்தல் நெருக்கத்தில்
அரசு ஊழியர் சங்கங்களும் தங்களது 18 அம்ச கோரிக்கைகளை தூக்கிக்கொண்டு தெருவுக்கு வந்துவிடுகிறார்கள். 

இந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் இறுதிக் காலக்கட்டத்தில் இப்போது எல்லா துறை


அரசு ஊழியர்களும் தினம், தினம் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

நானும் கடந்த அரசியல் தெரிந்த இந்த 25 ஆண்டுகளாக காண்பது, எப்போது போராட்டம் நடத்தினாலும் 18 அம்ச கோரிக்கை, 15 கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என போராடுகிறார்கள்.

90 களில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் இன்று ஒய்வு பெற்று இருப்பார்கள்.

ஆனால் இன்றும் அந்த கோரிக்கையின் எண்ணிக்கை மட்டும் மாறாமல் இருப்பது எப்படி என்பது தான் புரியாத புதிராக உள்ளது. 

அரியணையில் ஏறும் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் காலங்களில் இவர்களது போராட்டத்தால் படிந்து

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் கேட்பதை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி தந்துவிடுகிறார்கள். 

ஆட்சியில் இருக்கும் கட்சி ஒருபடி மேலே போய், அவர்களுக்கு டி.ஏ ஏற்றுவது, சம்பளம் உயர்த்துவது, படி உயர்த்துவது என ஏதோ ஒன்றை செய்து தந்து விடுகிறது. 
 
ஆனால், தமிழகத்தில் ஒரு ஆபத்தான நடைமுறையை தேர்தலுக்காக ஜெ அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு சாதாகமாக நிறை வேற்றியுள்ளது. 

அது, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக பொதுமக்ககள் புகார் தந்தால் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என

ஒரு அரசாரணையை வெளியிட்டு மக்கள் மடையர்கள் என்பதை காட்டியுள்ளது தமிழகத்தை ஆளும் ஜெ அரசாங்கம். 
அரசு என்பது மக்களுக்கானது. மக்கள் தான் இங்கு எஜமானர்கள். அந்த எஜமானர்க்கு வேலை செய்ய வந்த


வேலைக் காரர்கள் தான் ஆட்சி யாளர்களும், அதிகாரிகளும். இதை நான் கொச்சை மொழியில் சொல்கிறேன்.

சட்டத்தை இயற்றியவர்கள், சட்ட புத்தகத்தில் டீசண்டாக தெளிவாக மக்களுக்காக தான் சட்டம், அரசாங்கம் எல்லாம் என்கிறது.

அப்படியிருக்க லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரை கைது செய்து, சிறையில் அடைக்காமல் அதற்கு என் அனுமதி பெற வேண்டும் என்கிறது அரசாங்கம். 

எந்த அரசாங்கம் உடனே அனுமதி தரும். இன்று ஊழல் அதிகாரிகளை காப்பாற்றுவதே அரசியல்வாதிகள் தான்.

அரசியல்வாதிகளை காப்பாற்றுவது அதிகாரிகள். அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் நகையும், சதையும் போன்றவர்கள். 

இந்த ஒற்றுமை ஆட்சி செய்ய மட்டும்மில்லை, கொள்ளை யடிப்பதற்காக வும் தான். லஞ்ச ஒழிப்புத்துறை, கைது, வழக்கு, விசாரணை, துறை ரீதியான நடவடிக்கை, 

இடைநீக்கம் என இருந்தும் எதற்கும் பயப்படாமல் அரசு அலுவலகங் களில் லஞ்சம் வாங்கும் போக்கு அதிகரித்துக் கொண்டே உள்ளது.

ஒரு நல்ல ஆட்சி யாளர்கள் என்பவர்கள் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 
 
அதை விட்டுவிட்டு லஞ்சத்தை ஊக்கு விக்கும் நோக்கத்துடன், தவறு செய்வதையே

குறிக்கோளாக கொண்ட பெரும்பான்மை அரசு ஊழியர் களுக்கு சாதகமாக ஒரு அரசாணை என்றால்,

இனி அவர்கள் எதற்கும் கவலைப் படாமல் லஞ்சம் வாங்குவார்கள்.

இது தேர்தலுக்காக அரசு ஊழியர்களின் வாக்குகளை மொத்தமாக வாங்க போடப்பட்ட அரசாணை. பின்னால் இதை ரத்து செய்யலாம் என்கிறார்கள். 

அரசாணை போட்டு விட்டார்கள். அரசியல் கட்சிகள் இதற்கு குரல் கொடுக்காது,

காரணம் அவர்களுக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு தேவை. லஞ்சத்தை ஒழிக்க கூட்டணி சேர்ந்தோம் என்கிற மக்கள் நலக்கூட்டணி கட்சிகள் கூட இதற்காக எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. 


அரசியல் வாதிகள் அப்படித்தான். பேச்சுவேறு, செயல்வேறு என்பதை காட்டி விட்டார்கள்.

ஆனால், ஊழலுக்காக குரல் கொடுப்பவர்கள், லஞ்சத்தை எதிர்த்து இயக்கம் நடத்துபவர்கள் கூட

இதை வேடிக்கை பார்ப்பது இன்னும் வேதனையாக இருக்கிறது.

இன்று நாம் இதை எதிர்க்காமல் போனால் நாளை, லஞ்சம் தரவில்லை என பொது மக்கள் மீது வழக்கு போட அரசாணை போடுவார்கள்,

சட்டம் இயற்றுவார்கள். ஏன் எனில் இங்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள் ஜனநாயக வில்லன்கள் என்பதை மனதில் கொள்ளவும்.
Tags:
Privacy and cookie settings