சென்சார் போர்டு உறுப்பினர் ஆகிறார் கமல்ஹாசன் !

1 minute read
திரைப் படங்களுக்கு அனுமதி வழங்கும் சென்சார் போர்டின் தரத்தை அதிகரிக்க கூடுதலாக சென்சார் போர்டு குழுவின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ள தாகவும், 
சென்சார் போர்டு உறுப்பினர் ஆகிறார் கமல்ஹாசன் !
இதற்காக ஷியாம் பெனகல் அவர்களின் தலைமை யிலான குழு ஒன்று கூடுதல் உறுப்பினர்களை தேர்வு செய்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளி வந்தது 

இந்நிலையில் கூடுதல் உறுப்பினர்கள் பட்டியலில் உலகநாயகன் கமல்ஹாசனின் பெயரையும் ஷியாம் பெனகல் குழு பரிந்துரை செய்துள்ள தாகவும், 

இந்த பரிந்துரையின் அடிப்படையில் விரைவில் கமல்ஹாசன் சென்சார் போர்டு குழுவின் உறுப்பினராகும் வாய்ப்பு அதிகம் இருப்ப தாகவும் கூறப்படுகிறது.

ஷியாம் பெனகல் தலைமையி லான குழு சமீபத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து கமல்ஹாசன் உள்ளிட்ட 
ஒரு சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ள தாகவும் விரைவில் புதிய சென்சார் போர்டு உறுப்பினர்களை அமைச்சர் நியமனம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. 

இனி எந்விதமான முத்த காட்சிகளுக்கும் சென்சார் இருக்காது.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings