மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் உன்னத வாழ்க்கை குறித்து ரத்தினச் சுருக்கமான விளக்கம். பாராட்டு மழை பொழிந்த உலக நாடுகளின் சபை.
எளிமையான ஆங்கில உரையின் தமிழாக்கம் இதோ :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் - யார் தனக்கு விரும்பியதை தன் சகோதரனுக்கு விரும்பவில்லையோ அவண் உண்மையான முஸ்லிம் அல்ல.
அல்லாஹ்வுக்கு அழகான பல பெயர்கள் உண்டு அதில் ஒன்றுதான் அர்ரஹீம் – மிக்க கருனையாளன்.
நபிகள் நாயகம் தனது வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் அஸ்ஸலாமு அலைக்கும் எனக் கூறுவார்கள்.இதன் பொருள் , உங்கள் மீது அந்த இறைவனின் கருனை உண்டாகட்டும்.
இவ்வாறுதான் ஒரு முஸ்லிம் இறைவனது அன்பை மற்றவருக்கு வேண்டுவார். (உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்)
மேலும் முஹம்மத் நபி போர்க்களத்திலும் கூட எவ்வாறு மனிதநேயத்துடன் நடக்க வேண்டுமென தன் தோழர்களிடம் கூறுகையில், குழந்தைகளை, பெண்களை,
வயதான முதியவர்களைக் கொலை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்கள்.மேலும் எதிரிகளின் வசம் உள்ள மதபோதகர்கள், மரங்கள் ,ஆலயங்கள் ஆகியவற்றை சேதப்படுத்தக்கூடாது எனக் கூறினார்கள்.
இவைதான் முஸ்லிம்களுக்கு மதரஸாக்களில்(அரபு பாடசாலை) போதிக்கப்படுகிறது. (உலக நாடுகளின் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்).