மருத்துவ பட்டங்களுடன் கம்பி எண்ணும் அமெரிக்க இளைஞன் !

1 minute read
18 வயதான அமெரிக்க இளைஞன் அமெரிக்காவிலையே உயர்ந்த பட்டங்களையுடைய மருத்துவராக தன்னை விளம்பரப்படுத்தி 
மிகப்பெரிய வைத்திய சாலையில் பங்காளராக இணைந்து பணியாற்றும் போது கடந்த வாரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்க, புளோரிடா மாநிலத்தை சேர்ந்த லவ் ரொபின்சன் என்ற இளைஞன் தனது பெயரினை Dr. Malachi A. Love-Robinson PhD, HHP-C, AMP-C என வியத்தகு பட்டங்களுடன் தன்னை விளம்பரப் படுத்தியுள்ளான்.

இவ்வாறு அடையாளப்படுத்தி கொண்டு New Birth New Life Holistic and Alternative Medical Center & Urgent Care என்ற பெயரில் பங்காளராக வைத்தியசாலை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். 

தனது சேவைக்காக ஒவ்வொரு நோயாளியிடம் இருந்து ஆயிரம் டொலர்களை பெற்று வந்துள்ளான். இந்நிலையிலையே கைது செய்யப்பட்டுள்ளான். 
இக்கைது இவனுக்கு முதற்தடவையல்ல, இதற்கு முன்னர் 17 வது வயதிலும் அசல் வைத்தியர் போலவே ஆடை அணிந்து வந்து 

பிரசவ நிபுணருக்கான பரீட்சை எழுதிய போதும் வசமாக மாட்டிய ரொபின்சன் ஒருவாறு வெளியே வந்துள்ளான்.

அதன் பின் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலும் பிரபல மசாஜ் நிபுணராக தன்னை விளம்பரப்படுத்தி 

அனுமதி பெறாமல் மசாஜ் நிலையத்தை நடாத்தி வரும் போதும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

அதன் போது தனது புத்தி சாதுரியத்தால் அந்நாட்டு சுகாதார திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான அனுமதி பத்திரத்தை காட்டி வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
கைது செய்யப்பட்ட ரொபின்சன் பேட்டியளிக்கும் போது தான் எந்த நோயாளியையும் ஏமாற்றவில்லை தனக்கு திறமை உள்ளது என கூறியுள்ளான்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings