வங்கி கடனை செலுத்தாத எம்.பி.,க்கள் யார் யார்?

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாததாக, பிரபல தொழிலதிபரும், பார்லிமென்ட் எம்.பி.,யுமான விஜய் மல்லையா, மிகப் பெரும் சிக்கலில் சிக்கிஉள்ளார்.
இவரைப் போலவே, நுாற்றுக்கும் மேற்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.,க்கள், வங்கிக் கடனைச் செலுத்தாமல் உள்ளனர். இதில் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்தான் மிகவும் அதிகம். ‘பல்வேறு வங்கிகளிடமிருந்து கடனை வாங்கி, அதை செலுத்தாதவர்களில், 

இன்னாள் மற்றும் முன்னாள் எம்.பி.,க்களின் எண்ணிக்கை நுாற்றுக்கும் அதிகமாக இருக்கும்’ என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சிலர், சில லட்சங்களையும், பலர், பல ஆயிரம் கோடிகளும் செலுத்தாமல் உள்ளனர்.

வங்கிகளின் வாராக் கடன்களை ஆராயும்போது, அதில், 73 சதவீதம் பேர், ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கிய பணக்காரர்களே. ஏழை விவசாயிகளோ, நடுத்தர மக்களோ அல்ல என்பது தெரிய வந்துள்ளது. 

வங்கிகளுக்கு அதிக அளவு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியவர்களில், முதல், 30 பேர் மட்டும், 1.21 லட்சம் கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளனர். இது வங்கிகளின் மொத்த வாராக் கடனில், 40சதவீதமாகும். பாக்கி எவ்வளவு? 

லகடபதி ராஜகோபால்:

கடந்த, 2014ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தின் காங்கிரஸ் கட்சி லோக்சபா எம்.பி.,யாக இருந்தவர். அவருடைய நிறுவனம், பல்வேறு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, 34 ஆயிரம் கோடி ரூபாய். 

ஒய்.எஸ்.சவுத்ரி:

தற்போதைய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர். தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா எம்.பி., மொரிஷியஸ் நாட்டில், சவுத்ரியின் துணை நிறுவனம், 106 கோடி ரூபாய் கடனை வாங்கி செலுத்தவில்லை. 

அந்தக் கடனுக்கு, சவுத்ரியின் நிறுவனமே உத்தரவாதம் அளித்திருந்தது. அதன்படி, அவருடையநிறுவனத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது. 

ராயபதி சாம்பசிவ ராவ்:

இவரும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., 434 கோடி ரூபாய் கடனைச் செலுத்தாததற்காக, அவருடைய சொத்தை முடக்க உள்ளதாக, ஆந்திரா வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவருடைய டிரான்ஸ்டோரி

நிறுவனம், பல்வேறு வங்கிகளில் இருந்து, 1500 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
வெங்கிடராமி ரெட்டி:

டெக்கான் கிரானிகிள் குழுமத்தின் தலைவரான, காங்கிரஸ் – எம்.பி., இவர் பல்வேறு வங்கிகளிடம் இருந்து வாங்கிய, 4,000 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறையில் உள்ளார். 

ஜெய் பாண்டா:

பிஜூ ஜனதா தளம் எம்.பி.,யான இவருடைய இரண்டு நிறுவனங்கள், கடனைச் செலுத்தவில்லை என்ற புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகளவு வங்கி, கடன் தொகை செலுத்தாத, 20 பேர்களில் இவரும் ஒருவர். 

இவருடைய இந்தியன் சார்ஜ் குரோம் நிறுவனம், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, 2,300 கோடி செலுத்த வேண்டும். அந்த வங்கியின் மொத்த வாராக்கடனில் இது 16.5 சதவீதம்.
Tags:
Privacy and cookie settings