சூரியன், புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.
சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன.
சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது.
இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளி யாகிறது.
சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்து விட்டது. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதே போல எரிந்து கொண்டிருக்கும்.
சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன. சூரியனில் இருந்து தான் பூமி அனைத்துசக்திகளையும் பெறுகிறது.
இந்நிலையில் சீனா விஞ்ஞானிகள் அணுக் கரு இணைவை பயன்படுத்தி ஹைட்ரஜன் வாயுவை வெளியிடும் சூரியனை விட 3 மடங்கு அதிக வெப்பமுடைய சூரியனை கண்டுபிடித்து உள்ளனர்.
முக்கியமாக இந்த விஞ்ஞானிகள் அணி 2 நிமிடங்களுக்கு 50 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை நிலை நிறுத்த முடிந்தது. இச்சோதனை டப் ஹெபே இயற்பியல் அறிவியல் கழகத்தில் நடத்தபட்டது.
டோனட் வடிவ செயற்கை சூரியன் அணு உலையில் ஹைட்ரஜன் அணு அதி வெப்ப அடிப்படையிலான ஆயுதம் வெடித்து அதிக அளவு ஆற்றல் வெளிப்பட்டது.
திருப்பு முனையாக அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் அதிக அளவு வெப்பத்தை உருவாக்க முடியும் என கண்டறிந்து உள்ளனர்.
இதுவரை ஜெர்மனி விஞ்ஞானிகள் பயன்படுத்திய அணுக்கரு இணைவு முறை முன்னணியில் இருந்து வருகிறது.
2 மெகாவாட் நுண்ணலை கதிர்வீச்சு மூலம் 80 மில்லியன் டிகிரி வெப்ப ஹட்ரஜனை உற்பத்தி செய்து உள்ளனர்.
சீன இயற்பியல் விஞ்ஞானிகள் டோனட் வடிவ அரையில் வாயுவைந் நிறுத்தி 102 வினாடிகளில் சக்திவாய்ந்த காந்த புலத்தை பயன்படுத்தி 50 மில்லியன் செல்சீயஸ் வெப்பத்தை உருவாக்கி உள்ளனர்.