உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை எப்பொழுதும் ஒரு பொத்தானை அழுத்திதானே திறப்பீர்கள். அந்த பொத்தான் செயல் பட வில்லையென்றால் கவலை வேண்டாம். அதற்கு வழி இருக்கின்றது.
இந்த பிரச்சனை வன்பொருள் அல்லது மென்பொருள் செயல்படாமல் போனதால் நிகழ்ந்திருக்கலாம். வன்பொருள் பிரச்சனை என்றால் தானாகவே சரியாகி விடும். அதுவே மென்பொருள் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வுகள் இங்கே.
சார்ஜ்
சில நிமிடத்திற்கு உங்கள் போன் அல்லது ஆண்ட்ராய்டு டேப்ளெட்டை சார்ஜ் செய்யவும்.
உங்கள் போன் பேட்டரி சார்ஜ் இல்லாமல் இருந்தால் "empty battery" என்ற வாசகம் வரும். பேட்டரி சுத்தமாக தீர்ந்து போய் விட்டால் எந்த அறிவிப்பும் வராது.
10-15 நிமிடத்திற்கு உங்கள் டிவைஸை சார்ஜ் செய்தால் பிரச்சனை தீர்ந்தது. சார்ஜ் ஏறியவுடனேயே போன் ஆன் செய்து விடலாம்.
அதற்கு பிறகும் ஆன் ஆக வில்லையென்றால் வேறு கேபிள் அல்லது சார்ஜரை பயன்படுத்தி பார்க்கவும். பழுதடைந்த சார்ஜரால் கூட சில சமயம் பிரச்சனை நிகழும்.
அதற்கு பிறகும் ஆன் ஆக வில்லையென்றால் வேறு கேபிள் அல்லது சார்ஜரை பயன்படுத்தி பார்க்கவும். பழுதடைந்த சார்ஜரால் கூட சில சமயம் பிரச்சனை நிகழும்.
பேட்டரி
பேட்டரியை வெளியே எடுக்கவும் அல்லது நீண்ட நேர பிரஸ் செய்யவும். மற்ற செயல்முறைகளை போல் ஆண்ட்ராய்டும் சில நேரங்களில் செயல் இழந்து போகும்.
உங்கள் டிவைஸ் ஸ்தம்பித்து நின்றால் இயங்குதளம் ஸ்தம்பித்து இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் "hard reset" அல்லது power cycle செய்யலாம். இதனால் போன் இயல்பு நிலைக்கு மாறும்.
உங்கள் டிவைஸ் ஸ்தம்பித்து நின்றால் இயங்குதளம் ஸ்தம்பித்து இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் "hard reset" அல்லது power cycle செய்யலாம். இதனால் போன் இயல்பு நிலைக்கு மாறும்.
எடுக்கமுடியாத பேட்டரியா
உங்கள் போனின் பேட்டரியை வெளியே எடுக்க முடியாத வடிவமைப்பா. பேட்டரியை வெளியே எடுக்க முடிந்தால் எடுத்து திரும்ப போட்டால் சரியாகி விடும். ஆனால் சில கருவிகளில் பேட்டரியை வெளியே எடுக்க முடியாது.
அப்பொழுது பவர் பொத்தானை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். பொத்தானை 30 நொடிக்கு அழுத்த வேண்டும். இதானால் போனுக்கான பவர் துண்டிக்க பட்டு மறுபடியும் பவரை வழங்கி போனை செயல் படுத்தும்.
ஃபேக்ட்ரி ரீசெட் செய்யவும்
உங்கள் போன் திடிரென செயல் இழந்து போனால் ஃபேக்ட்ரி மோடு சென்று ஃபேக்ட்ரி ரீசெட் செய்யவும். ஆண்ட்ராய்டு மொபைலை பவர் டவுன் செய்து பல பொத்தான்களை ஒன்றாக ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்.
நீங்கள் அழுத்தும் போனின் பொத்தான், போனை பொருத்து வேறுபட்டிருக்கும். ஒவ்வொரு கருவிக்கு ஒவ்வொரு விதத்தில் பொத்தான் இருக்கும். சில நேரங்களில் போனின் மூன்று பொத்தான்களை சேர்ந்திருக்கும்.
ரீஸ்டோர்
கருவியின் firmware-ஐ ரீஸ்டோர் செய்யவும். கருவியின் மென்பொருள் பழுதடைந்தால் ஃபேக்ட்ரி ரீசெட் ஒத்து வராது.
அப்படியென்றால் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை நிறுவ வேண்டும் என்று அர்த்தம். ஆண்ட்ராய்டின் வெர்ஷன் ஒவ்வொரு கருவிக்கும் மாறுபட்டிருக்கும்.
அப்படியென்றால் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை நிறுவ வேண்டும் என்று அர்த்தம். ஆண்ட்ராய்டின் வெர்ஷன் ஒவ்வொரு கருவிக்கும் மாறுபட்டிருக்கும்.
உங்கள் போன் தயாரிப்பாளர்களின் இணையதளம் செல்லவும். firmware-ஐ அதிலிருந்து மேனுவலாக நிறுவவும். அதில் இல்லை என்றால் சர்வீஸ் கடைக்கு எடுத்து சென்று நிறுவி கொள்ளலாம்.