கதறி அழுத சிறுமிக்கு பச்சை குத்திய கொடுமை !

1 minute read
முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்தநாளை யொட்டி சென்னையில் சிறுமி ஒருவருக்கு கையில் பச்சை குத்தப்பட்டது. வேதனையை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுத சம்பவம் அமைச்சர்கள் முன்னிலை யிலேயே நடந்துள்ளது மனித உரிமை ஆர்வலர்க ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. 

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி, வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். 

பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்திக்கொண்டனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது.

அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ தற்பொழுது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் முன்னிலையிலேயே அந்த சிறுமிக்கு பச்சை குத்தப்பட்டுள்ளது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
சிறுமிக்கு வலுக்கட்டாயமாக பச்சை குத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு ஒன்று ரெடியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
Tags:
Today | 29, March 2025
Privacy and cookie settings