2006 ஆம் ஆண்டு டென்மார்க்கில் இறைதூதர் முஹம்மது நபியை குறித்து வெளியான கார்டூன் ஒன்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கார்டூனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தது, பல நாடுகளில் டென்மார்க் தூதரகம் முற்றுகையிடப் பட்டது.
அப்படியோரு கார்டூனை கருத்துரிமை என்று வாதிட்டவர் தான் டென்மார்க் பாராளுமன்ற பேச்சாளர் ஜெர்ஸ்கார்ட்.
தற்பொழுது அகதிகளின் விஷயத்தில் டென்மார்க் எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்த கார்டூன் ஒன்றை தி கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டென்மார்க் வரும் அகதிகள் 1400 டாலருக்கு மேல் மதிப்பிலான பொருட்களை தங்களுடன் வைத்திருந்தால்
அதனை பறிமுதல் செய்யும் சட்டத்தை டென்மார்க் அமுல் படுத்தியிருந்ததை ஹிட்லரின் நாசிச கொள்கையுடன் ஒப்பிட்டு வரையப்பட்ட கார்டூன் அது.
டென்மார்க்கின் இந்த முடிவு பலதரப்பட்டவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தது.
ஹிட்லர் ஆட்சிகாலத்தில் இப்படித்தான் யூதர்களும் நடத்தப் பட்டனர் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கருத்து தெரிவித்திருந்தது.
இத்தகைய விமர்சனங்கள் சரியில்லை என்றும் அதை தொடர்ந்து தி கார்டியன் செய்தி நிறுவனத்திற்காக ஸ்டீவ் பெல் வரைந்த
டென்மார்க் நாஸி ஒப்பீட்டு கார்டூன் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று ஜெர்ஸ்கார்ட் கூறியுள்ளார்.
இவரிடம் 2006 முஹம்மது நபி குறித்த கார்டூனுக்கு அவர் அளித்த ஆதரவையும் தற்போதைய இந்த கார்டூன் குறித்த அவரது நிலையையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பிய பொழுது
இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்றும் இது டென்மார்க்கின் சட்டத்தை தவறுதலாக புரிந்துகொண்ட அதனை ஊதி பெரிதாக்கியது தொடர்பானது” என்று கூறியுள்ளார் .
மேலும் அவர் கூறுகையில் தனக்கு எந்த நாட்டின் தூதரகத்தையும் எரித்திடும் எண்ணங்களோ அல்லது அவர்கள் நாட்டு கோடியை மித்திக்கும் எண்ணங்களோ இல்லை என்று கூறியுள்ளார்.
அகதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை குறித்து கருத்துகணிப்பு நடத்திய டென்மார்க் தொலைக்காட்சி ஒன்று தெரிவிக்கையில்
தற்போதைய நிலையில் தேர்தல் நடைபெற்றால் அதில் ஆளும் கட்சி கட்டாயமாக தோற்றுவிடும் என்று தெரிவித்துள்ளது.
அதே போல அகதிகளுக்கு ஆதரவான கட்சி ஒன்றிற்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ளது என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அகதிகளாக வந்த இஸ்லாமிய மாணவர்கள் உண்ண மாட்டார்கள் என்று பன்றிக் கறியை பள்ளி உணவில் இருந்து பல பள்ளிகள் அகற்றினர்.
ஆனால் இது டென்மார்ககின் உணவு கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்றும் அனைத்து பள்ளிகளிலும் பன்றிக்கறியை கட்டாயமாக்க வேண்டும் என்று ஆளும் கட்சி வலியுறுத்தியது குறிப்பிடத் தக்கது.
Tags: