எல்சல்வடோரின் சிறையில் கைதிகளுக்கு முன்னால் நிர்வாண நடனம் !

தென் அமெரிக்க நாடான எல் சல்வடோரிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளை மகிழ்விப்பதற்காக 3 நடன மங்கைகளின் நிர்வாண நடன விருந்து நடத்திய அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். 
கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இஸால்கோ சிறைச்சாலையிலேயே இந்த நிர்வாண நடன விருந்து நடத்தப்பட்டுள்ளது. 2012 செப்டெம்பரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்று இணையத்தில் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்அமெரிக்க மத விழாவொன்றை முன்னிட்டு இந்த நடன நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

மேற்படி மத விழாவின்போது டிஸ்கோ நடனக்குழுவொன்றை அழைப்பதற்கு அனுமதி கோரி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கைதிகள் கடிதம் அனுப்பினர். 

அதையடுத்து பெண்களை அங்கத்தவர்களாகக் கொண்ட நடனக்குழுவொன்று அழைக்கப்பட்டது. ஆனால், இஸால்கா சிறைச்சாலையில் நடைபெற்றது வெறும் டிஸ்கோ நடனமல்ல. துகிலுரி நடனமாகும்.

 கைதிகளுக்கு முன்னால், 3 பெண்களும் நிர்வாணமாக நடனமாடும் காட்சிகள் மேற்படி வீடியோவில் பதிவாகியுள்ளன. சுமார் 200 கைதிகள் இதில் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

எல் சல்வடோர் பொலிஸார், மற்றொரு விவகாரம் தொடர்பாக கிரிமினில் குழுவொன்றிடம் நடத்திய சோதனையின்போது இந்த வீடியோ பதிவு கண்டுபிடிக்கப்பட்டது. 41 விநாடி நேரம் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் வெளியான பின்னர் எல்சல்வடோரில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதேவேளை, இப் பெண்கள் அச்சுறுத்தப்பட்டு இவ்வாறு நடனமாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனரா என எமக்குத் தெரியவில்லை. 

இந்த மாதிரியான எத்தனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதும் தெரியவில்லை என எல்சல்வடோரின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பட்றீசியா வல்விசோ தெரிவித்துள்ளார். 

 இந் நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்துமாறு எல் சல்வடோர் சிறைச்சாலை சேவைகள் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என அந்நாட்டு நீதித்துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings