கேரளாவில் மதம் பிடித்த யானை செய்த அட்டகாசம் !

1 minute read
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள புலபட்டா என்ற ஊரில் அமைந்துள்ள செருநல்லுசெரி கோவில் விழா நடைபெற்றது. 3-வது நாளான
நேற்று நடந்த சாமி ஊர்வலத்தில் 11 யானைகள் அணிவகுத்து சென்றன. அதில் காளிதாசன் என்ற யானைக்கு திடீரென்று மதம் பிடித்தது. 

பிளிறிக் கொண்டு ஓட ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் பக்தர்கள் அனைவரும் சிதறி ஓடி தப்பினர். கோபம் கொண்ட யானை சாலை ஓரம் நின்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களை தந்தத்தால் குத்தி தூக்கி வீசியது. 

அப்போது யானை மீது இருவர் அமர்ந்து இருந்தனர். அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. இருவரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

அந்த நேரத்தில் மற்ற 10 யானைகளும் பத்திரமாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டன. சுமார் 4 மணி நேரம் கழித்து யானை காளிதாசன் சகஜ நிலைக்கு திரும்பியது. அதன் பிறகு மேலே இருந்த இரண்டு பேரும் கீழே இறங்கினர். 

அவர்களுக்கும் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் 20 வாகனங்கள் சேதம் அடைந்தன. ஒரு மின்சார கம்பமும் சேதம் அடைந்தது.
Tags:
Today | 25, March 2025
Privacy and cookie settings