சயீப்புடன் சுற்றுலா செல்வதையே நான் விரும்புகிறேன் கரீனா !

தரமற்ற திரைப்படங்களில் நடிப்பதைவிட தனது கணவர் சயீப் அலி கானுடன் சுற்றுலாவில் ஈடுபடுவதை தான் விரும்புவதாக நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.
சயீப்புடன் சுற்றுலா செல்வதையே நான் விரும்புகிறேன் கரீனா !
35 வயதான கரீனா கபூருக்கு அதிக படங்கள் இல்லை. கரீனாவின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான கட்டம் இதுவென சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், நடிகை கரீனா கபூர் இதை மறுக்கிறார்.

அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல், சிறந்த திரைப்படங்களை மாத்திரம் தெரிவு செய்து தான் நடிப்பதாக அவர் கூறுகிறார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என நான் எண்ணவில்லை. 

அதிக படங்கள் இல்லா விட்டால் காணாமல் போய்விடுவோம் என்ற அச்சம் எதுவும் எனக்கில்லை. தரமற்ற படங்களில் நடிப்பதை விட சயீப்புடன் சுற்றுலா செல்வதற்கு நான் விரும்புகிறேன் என கரீனா கபூர் தெரிவித்துள்ளார். 

கரீனா கபூர் நடிப்பில் அடுத்ததாக கீ அன்ட் கா எனும் திரைப்படம் வெளியாகவுள்ளது. அர்ஜூன் கபூர் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஆர்.பால்கி இயக்குகிறார்.
பொலிவூட் நடிகைகள் பலர் பாடல்களை பாடுவதுடன் திரைப்படத் தயாரிப்பாளர்களாகவும் விளங்குகின்றனர். ஆனால், இவ்வாறு பல்வேறு துறைகளில் ஈடுபட வேண்டுமென தான் ஆர்வம் காட்டவில்லை எனவும் கரீனா தெரிவித்துள்ளார்.

என்னால் பாட முடியாது. திரைப்படங்களை இயக்குவதற்கோ, தயாரிப்பதற்கோ நான் விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாக எனது வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டுமென நான் விரும்புகிறேன் என அவர் கூறுகிறார்.
Tags:
Privacy and cookie settings