குப்பை தொட்டியில் பிள்ளையைப் போட்டு சிக்கிக் கொண்ட நஷீன் !

1 minute read
அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக தவறாக எண்ணிய தாயார் குப்பை தொட்டியில் வீசிவிட்டு மருத்துவமனையில் ஆடிய நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குப்பை தொட்டியில் பிள்ளையைப் போட்டு சிக்கிக் கொண்ட நஷீன் !
அமெரிக்காவின் Staten தீவுப்பகுதியில் உள்ள New Springville என்ற நகரில் Nausheen Rahman (28) என்ற கர்ப்பிணி பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இவருக்கு கடந்த வியாழக்கிழமை அன்று பெண் குழந்தை ஒன்று வீட்டிலேயே பிறந்துள்ளது.

ஆனால், குழந்தை பிறந்ததும் எந்த அசைவும் இல்லாததால் குழந்தை இறந்து விட்டதாக எண்ணி வீட்டிற்கு வெளியே இருந்த குப்பை தொட்டியில் வீசி மறைத்துள்ளார்.

குழந்தையை பிரசவித்ததால் அவருக்கு தொடர்ந்து ரத்தப் போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக Staten பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

‘எனக்கு 5 நாட்களுக்கு முன்னர் இறந்த நிலையில் குழந்தை பிறந்ததாகவும், தற்போது ரத்தப் போக்கு நிற்காததால் சிகிச்சைக்கு வந்துள்ளதாக’ மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், பெண்ணின் வார்த்தையில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துவிட்டு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வீட்டில் குப்பை தொட்டியில் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, ‘குழந்தை பிறந்த நேரத்தில் உயிரோடு தான் இருந்துள்ளது என்றும், குப்பை தொட்டியில் வீசிய சில மணி நேரங்களுக்கு பிறகு தான் குழந்தை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக’ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தை கடந்த வியாழக்கிழமை தான் பிறந்தது என்ற உண்மையையும் அந்த பெண் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். 

தற்போது குழந்தையை மறைத்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings