திருநெல்வேலியில் மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசிக்கொண்டிருந்த போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் அசந்து தூங்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மேடையில் அமர்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தூங்கி வழிந்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேசுகையில்,
இன்று நான் வடை சாப்பிடும் போது கூட மறைவில் தான் சாப்பிட்டேன் இல்லை என்றால் கூட்டணி தலைவர்களுக்கு கொடுக்காமல் வடை சாப்பிடுகிறார் வைகோ என்று செய்தி போடுவார்கள் என பேசினார்.
தொடர்ந்து பேசிய வைகோ, செய்தி தொலைக்காட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ "நாங்கள் அபாயகரமானவர்கள் எங்களிடம் வைத்துக்கொள்ளாதீர்கள்" என்று கூறினார்.
இதனிடையே, தொடர்ச்சியான பயணங்களாலும், அடுத்தடுத்து பொது கூட்டங்களில் பங்கேற்று வருவதாலும் அசதியின் காரணமாக கண் அயர்ந்திருந்திருக்கலாம்
அல்லது சிந்தித்திருக்கலாம் என்று மேடையில் தூங்கிய தலைவர்களுக்கு ஆதரவாக வைகோ விளக்கமளித்தார்.