நயன்தாராவாக ஐயா படத்தில் பாவாடை தாவணியுடன் அறிமுகமான போது இரண்டு படங்களுக்குத் தான் தாங்குவார் என்று கணிக்கப்பட்டார்.
ஆனால் இன்று பத்து ஆண்டுகளை நிறைவு செய்து தென்னிந்திய சினிமாவின் மகாராணியாக இருக்கிறார்.
இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? இந்த சாதனையை அவர் எப்படி படைத்தார்?
பெரிய சினிமா பின்னணியோ, அல்லது பெரும் கோடீஸ்வரியாக இருந்து பொழுது போக்கிற்காக சினிமாவிற்கு வந்தவரோ அல்ல.
கேரளாவிலிருந்து புறப்பட்டு வரும் எல்லா சேச்சிகளைப் போலவும் கனவுகளை மட்டுமே சுமந்து வந்தவர் தான் இவர்.
காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.30 மணிக்கு, மேக்கப்போடு காத்திருப்பார்.
மூன்று லட்சம் சம்பளம் வாங்கும் போதும் அப்படித் தான், மூன்று கோடி சம்பளம் வாங்கும் போதும் அப்படித் தான்.
அவரது மேக்கப் அறைக்குள் அவரைப் பற்றிய கிசுகிசுக்களை வெளியிட்ட நாளிதழ்களும், பத்திரிகைகளும் சிதறிக் கிடக்கும்.
அவற்றை கைகளால் ஒதுக்கி வைத்து விட்டு, மேக்கப் போட்டு ஷாட்டுக்கு செல்வது தான் நயன் ஸபெஷல்.
தன் தனிப்பட்ட விஷயங்கள் எதுவுமே தன் தொழிலைப் பாதிக்க அனுமதிக்காதவர் அவர். ஒரு படத்துக்கு நயனை கமிட் பண்ணுவது தான் கடினம்.
கமிட் பண்ணி விட்டால் லைடபோயை விட அதிகமாக வேலை செய்வார் என்பது தான் இண்டஸ்ட்ரி அவருக்கு கொடுக்கும் மதிப்பீடு.
ஒரு கதை பிடித்து விட்டால், கெரக்டர் பிடித்து விட்டால், உடன் நடிப்பது யார், திரையுலகில் அவரது ரேஞ்ஜ் என்னவென்றெல்லாம் ஒரு போதும் கவனிக்க மாட்டார்.
அவரைப் பொறுத்தவதை ஆரியாவும், ஆரியும் ஒன்று தான். அதே போல ஒரு கெரக்டருக்கு என்ன தேவையோ அதைச் செய்ய ஒரு போதும் தயங்கியதில்லை.
அப்படிச் செய்ய மாட்டேன், இப்படிச் செய்ய மாட்டேன் என்று அவர் ஒருபோதும் நிபந்தனைகள் விதித்ததில்லை.
சிக்ஸ் பேக் வைக்க ஹீரோக்களே திணறிக் கொண்டிருக்க, பில்லா படத்தில் சிக்ஸ்பேக் காட்டி வியக்க வைத்தவர்.
இப்படி அவர் தொழில் பக்தி பற்றி நிறைய பேசலாம்.
ஒரு பெண் ஒரு ஆணை நம்பி நேசிப்பதும், அந்த நேசத்தில் குறைபாடு தெரிகிற போது விலகிக் கொள்வதும் இயல்பானதே. நயன்தாரா வாழ்க்கையிலும் அது தான் நடந்தது.
அவர் மிகப்பெரிய செலிபிரிட்டி என்பதால், மீடியாக்களின் வெளிச்சம் அவர் மீது விழுந்து கொண்டே இருப்பதால்
அவர் என்னவோ காதல் பைத்தியம் என்பது போன்ற இமேஜ் மீடியாக்களால் உருவாக்கப் பட்டிருக்கிறது.
அவர் நினைத்தால் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரனை தன் காதல் வலையில் சிக்க வைக்க முடியும்.
ஆனால் இன்று அவர் சில லட்சங்களே சம்பளம் பெறும் ஒரு புதுமுக இயக்குனரைத் தானே காதலிப்பதாக சொல்கிறார்கள்.
அவர் தேடுவதும், விரும்புவதும் களங்கமற்ற மனதையும், தூய அன்பையும் தான். அது இல்லாதவர்களோடு அவர் வலுக்கட்டாயமாக காதல் கொண்டிருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.