மோட்டார் இன்ஷூரன்ஸ்.. பிரீமியச் செலவைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

பிரீமியச் செலவைக் குறைக்க வாகன இன்ஷூரன்ஸ் எடுப்பவர் அங்கீக ரிக்கப்பட்ட வாகன சங்கத்தின் உறுப்பினர் என்றால்,
பாதுகாப்பு பற்றி அவர் விழிப்பு உணர்வு மிக்கவராக இருப்பார் என்று கருதி, அவருக்கு பிரீமியத்தில் 5 சதவிகிதம் (அதிக பட்சம் 100-500 ரூபாய்) தள்ளுபடி தரப்படுகிறது.

திருட்டுத் தடுப்புக் கருவி, வாகனத்தில் பொருத்தி இருந்தால், பிரீமியத்தில் சலுகை இருக்கிறது. 

வாகனத்தைப் பயன்படுத்தாத போது… 

வேலை விஷயமாக வெளிநாடு அல்லது வெளி மாநிலத்துக்கு 3 அல்லது 6 மாத காலத்துக்குச் சென்றால், வாகனத்தை கார் ஷெட்டில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டுச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அப்போது, அந்தக் காலத்துக்கான பிரீமியச் செலவு வீண்தானே? பிரீமியச் செலவைக் குறைத்து, அந்தக் காலத்தில் தீ, வெள்ளம், திருட்டு, கொள்ளை போன்ற வற்றிலிருந்து மட்டும் வாகனத்தைப் பாதுகாக்க பாலிஸி எடுக்கலாம். 

இதை லெய்ட் அப் பீரியட் பாலிஸி என்பார்கள். விஷயத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்தால், அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்லும் முறையில் வாகனத்தை இந்தக் கால கட்டத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியம். 

ஊர் திரும்பிய பிறகு காரை ஷெட்டிலிருந்து எடுத்து விட்டு, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்து விட்டால், உங்கள் வழக்கமான பாலிஸி நடைமுறைக்கு வந்து விடும். 

இந்த முறையில் பிரீமியச் செலவைக் குறைக்க முடியும்.
Tags:
Privacy and cookie settings