தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கும்
நிலையில் அஜித்திடம் கண்டிப்பாக இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சற்று கண்டிப்புடனே நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டதாம்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு தன்னால் நிச்சயம் வர முடியாது என்று அஜித் தரப்பில் இருந்து பதிலளித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது. இதனால் அஜித் மீது நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆயினும் அவருக்கு இருக்கும் அதிகபட்ச செல்வாக்கு காரணமாக வெளிப்படையாக அவரை விமர்சிக்க முடியாத நிலையில் நிர்வாகிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அஜித் வருவார் என்ற அறிவிப்பால் டிக்கெட்டுக்கள் விற்பனையாகும் எண்ணிக்கை அதிகமாகும் என்று எண்ணியிருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் உள்பட பல இளைய தலைமுறை நடிகர்களும் போட்டியில் விளையாடும் 50 வீரர்கள் அடங்கிய பட்டியலில் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.