நீங்க கிங், நாங்க கிங்மேக்கர்.. மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் !

மக்கள் நலக்கூட்டணிக்கு மக்களைப் பிடிக்கும், எனக்கு தெய்வத்தைப் பிடிக்கும் நான் யாரிமும் விலை போகவில்லை. அப்பவும் சரி இப்பவும் சரி மக்களுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய விஜயகாந்த், அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த கூட்டத்துல நிறைய பேசுவேன். 

இன்றைக்கு எனக்கு முன்னதாக நாலு பேரும் நிறைய பேசி விட்டார்கள். நான் என்னை மெதுவாக இனி மாற்றிக்கொள்வேன். படிப்படியாக மாற்றிக்கொள்வேன்.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நான்கு பேர் வந்தார்கள். நீங்க கிங்கா இருங்க, நாங்க கிங்மேக்கரா இருக்கிறோம் என்றார்கள். கூட்டணி ஆட்சி என்று கேட்டார்கள், தாராளமாக அறிவித்துவிடுங்கள் என்று கூறிவிட்டேன்.

பணத்தாசையில் விஜயகாந்த் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று எழுதினார்கள். நான் யாரு பக்கமும் விலை போகவில்லை. அன்றே சொன்னேன், தெய்வத்தோடும், மக்களோடுதான் கூட்டணி. தெய்வம் தான் வழிகாட்டும்.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு தெய்வம் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாது. ஆனால் எனக்கு தெய்வம் பிடிக்கும். நான்கு பேரும் நான்கு விதமான கொள்கை உடையவர்கள் என்று நினைக்காதீர்கள்.

நான்கு பேரும் ஒரே கொள்கையை கொண்டவர்கள். என்னை விட இவர்கள் அனைவரும் மூத்தவர்கள்தான். ஏன் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள், என்னை ஏற்றுக்கொண்ட அவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி.

அதிக நேரம் நான் பேச விரும்பவில்லை. இருந்தாலும் இங்கே வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்களே. சினிமாவில் வசனம் அந்த பக்கம் இந்த பக்கம் என கேட்டு கேட்டு பேசுவதால்தான் நான் ஒரே பக்கமாக பார்த்து பேச மாட்டேன். பல பக்கம் பார்த்து பேசுவேன்.

எழுதி படித்தால் கீழே குனிய வேண்டியதிருக்கும். அப்போது கத்துவாங்க. கத்துனா எனக்கு கோபம் வரும். இயற்கையான கோபம்தான். அவுங்களுக்கு என்னன்னா விஜயகாந்த் பேச்சை நிறுத்திட்டாரே, அப்படி என்கிற கோபம். 

இங்கே இருக்கிற அனைவருக்கும் நன்றி மக்கள் நலக்கூட்டணி தேமுதிக கூட்டணி அமைய பாடுபட்ட அனைவருக்கும் நன்றி வணக்கம்.
Tags:
Privacy and cookie settings