ரோபோக்களின் தொழில்நுட்பத்தில் செயற்கை அறிவு தொடர்ந்து முன்னேறி வருவதால் அடுத்த 30 ஆண்டுகளில் ஏறக்குறைய உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதியளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் உருவாகும் என கணிணி வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி அமெரிக்காவில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் கணிணி விஞ்ஞானியாக பணியாற்றி வரும் மோஷி வார்தி தெரிவித்தவை பின்வருமாறு:-
அடுத்த 30 ஆண்டுகளில் மனிதர்கள் செய்யும் எல்லா வேலைகளையும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ரோபோக்கள் செய்யும். இதனால், உலகப் பொருளாதாரம் 50 சதவீதம் அளவுக்கு வேலையில்லா திண்டாட்ட பிரச்சனையை சந்திக்கும்.
இயந்திரங்கள் எல்லா வேலைகளையும் செய்தால் மனிதர்கள் என்ன செய்வார்கள்? என்ற இந்த கேள்வியை மனித சமுதாயம் முன்னிறுத்த வேண்டும் என விரும்புகிறேன்.
நாம் இதுவரை உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு எந்த அளவிற்கு நன்மையை வழங்கியிருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும்.
தொடர்ந்து ரோபோட்டிக் தொழில்நுட்பத்தி்ல் செயற்கை அறிவு முன்னேற்றம் கண்டுவருவது வருமானத்தில் ஏற்ற இறக்கங்களை உருவாக்கி சமநிலையற்ற தன்மையையும், நடுத்தர வேலைவாய்ப்புகள் முழுவதையும் அழித்து விடும்.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
மோஷி வார்தி அமெரிக்க நேஷனல் அகாடமி ஆப் இன்ஜினியரிங் மற்றும் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்-ல் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments