ஹீரோயின் இயக்குனர்கள் இவர்கள் தான், எப்படி?

தமிழ் சினிமாவில் பல காலங்களாக மரத்தை சுற்றி நடனமாட தான் ஹீரோயின்கள் பயன்பட்டனர். எப்போதாவது குறிஞ்சு மலர் போல ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வரும்.
ஹீரோயின் இயக்குனர்கள் இவர்கள் தான், எப்படி?
இது ஒரு புறம் இருக்க, ஒரு சில இயக்குனர்கள் எங்கிருந்து தான் இந்த ஹீரோயின்களை கொண்டு வரார்களோ என்று நாமே நினைக்கும் அளவிற்கு அசத்துவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு ஹிட் லிஸ்ட் நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.

பாரதிராஜா

தமிழ் சினிமாவில் ர எழுத்தில் எந்த ஹீரோயின்கள் பெயர் ஆரம்பித்தாலும் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் இது பாரதிராஜாவின் கண்டுப்பிடிப்பு என்று. 

அந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஒர்ஜினல் பெயரை ராதிகா, ராதா, ரேவதி என இவர் இஷ்டத்திற்கு மாற்றிவிடுவார். 
இதில் தப்பித்தது காஜல் அகர்வால் மட்டுமே. இருந்தாலும் மோதிரக்கையால் கொட்டு வாங்குவது போல் இவர் படங்களில் அறிமுகமான அனைத்து ஹீரோயின்களும் டாப் ஹீரோயின்ஸ் தான்.

மணிரத்னம்

எத்தனை ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஒட்டு மொத்த இந்தியா இளைஞர்களின் கனவை கெடுக்க காரணமானவர் மணிரத்னம் தான். ஆம்,

இவர் தான் உலக அழகி ஐஸ்வர்யா ராயை இருவர் படத்தின் மூலம் சினிமா துறைக்கு அழைத்து வந்தது. இதன் பிறகு ஐஸ்வர்யா ராய் அடைந்த உயரத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

ஷங்கர்

இன்று பல பெண்கள் தங்கள் பாய் பிரண்டை டார்ச்சர் செய்வதற்கு காரணம் ஷங்கர் தான். ஆம், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை பார்த்து விட்டு தங்களை ஜெனிலியாக்களாக நினைத்து கொண்டு 
ஹீரோயின் இயக்குனர்கள் இவர்கள் தான், எப்படி?
ஒரு கட்டத்தில் இந்த பெண்கள் செய்த சேட்டைக்கு அளவே இல்லை, அப்படிப்பட்ட ஜெனிலியாவை தன் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகப் படுத்தியவர் ஷங்கர் தான்.

அல்போன்ஸ் புத்திரன்

யார் இவர்? நம்ம ஊரில் இப்படியொரு இயக்குனரா? என்று சத்தியமாக இந்த கட்டுரையை படிக்கும் யாரும் கேட்க மாட்டார்கள், ஏனெனில் இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் இவரை தெரியும், 

ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர். ஆனால், இவருக்கு மட்டும் எங்கிருந்து தான் இத்தனை அழகிகள் கிடைப்பார்களோ, 

என்ன தான் மலையாளத்தில் அழகழான ஹீரோயின்களை இவர் அறிமுகப் படுத்தினாலும் அவர்களை கொண்டாடப் போவது தமிழ் ரசிகர்கள் தான். நஸ்ரியா, சாய் பல்லவி, மடோனா, அனுப்பமா என சொல்லிக் கொண்டே போகலாம்.

பொன்ராம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானாலும், இவர் அறிமுகப் படுத்திய ஸ்ரீதிவ்யா தான் இன்று தமிழ் சினிமா இளைஞர்களின் பேவரட். 
ஹீரோயின் இயக்குனர்கள் இவர்கள் தான், எப்படி?
அதே போல் என்ன தான் இது என்ன மாயம் படத்தில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகி யிருந்தாலும், இளைய தளபதி விஜய்யே இவரை தன் அடுத்த படத்திற்கு கமிட் செய்தது பொன்ராம் இயக்கிய ரஜினி முருகன் படத்தை பார்த்து தான்.
Tags:
Privacy and cookie settings