ஓபிஎஸ்‬ அணியினர் சொத்துக் குவிப்பு: விசாரணை நடத்த ஜெ. முடிவு !

ஓ.பி.எஸ். தலைமை யிலான ஐவர் அணியினர் தென் மாவட்டங்களில் வாங்கிக் குவித்துள்ள சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்த ெஜ. முடிவு செய்துள்ளார். 
இதனால் ‘பினாமிகள்’ பலர் அதிர்ச்சியடைந் துள்ளனர். தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. திமுகவில் விருப்பமனு அளித்த வர்களிடம் தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் நடத்தப் பட்டது. 

காங்., தேமுதிகவும் நேர்காணலை நடத்தி முடித்து விட்டது. அதிமுக சார்பில் நேற்று முன்தினம் திடீரென 5 பேரை மட்டும் அழைத்து ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். 

மொத்தம் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் விருப்பமனு செய்துள்ள நிலையில் 5 பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தி, நேர்காணல் முடிந்து விட்டதாகவும் அறிவிக்க ப்பட்டுள்ளது. 

இதனால் யாருக்கு சீட்டு கிடைக்குமோ என்ற குழப்பம் நிலவுகிறது. அதிமுகவில் நடந்த நேர்காணலில் ஓபிஎஸ் தலைமையிலான ஐவர் அணியினர் கலந்து ெகாள்ளாததால், அவர்களுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது என்பது திட்டவட்டமாகிறது.

இதற்கிடையில் ஐவர் அணியினர், தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி, மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களிடம் கோடிக் கணக்கில் பணம் கறந்துள்ளனர். 

மேலும் ஆட்சி முடியும் தருவாயில் பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைதுறை, ஆயத்தீர்வை ஆகிய வளம் ெகாழிக்கும் துறைகளை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளனர். 

இவர்கள் பினாமி பெயரில் ஏராளமான சொத்துக்களையும் வாங்கி குவித்துள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிக சொத்துக்களை பினாமிகள் மூலம் வாங்கியிருப்பது உளவுத்துறை மூலம் கட்சி மேலிடத்திற்கு தெரியவந்துள்ளது. 

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் ஐவர் அணியினர், அபார்ட்மென்ட்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வாங்கி குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

இதற்கிடையில் ஐவர் அணியினர் வாங்கியுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஜெயலலிதா இறங்கியுள்ளார். இதற்காக உளவுத்துறை உதவியுடன் ஒரு டீமை ஏற்படுத்தி அவர்களது சொத்துக்கள் குறித்த விவரத்தை சேகரித்து வருகிறார்.

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட குழுவினர், கடந்த சில தினங்களுக்கு முன் சேலம், மதுரை, தேனி போன்ற இடங்களுக்கு சென்று பினாமி பெயர்களில் வாங்கப்பட்ட சொத்துக்கள், பணம் குறித்து விசாரணை நடத்தினர். அடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. 

 குறிப்பாக ஓபிஎஸ் ேகரளாவில் வாங்கிய சொத்துக்கள் தொடர்பாக, கேரள முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு அறிக்கை தயார் செய்து அனுப்பினார். அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது. இவர்களிடம் இருந்து சொத்து மற்றும் பணத்தை கைப்பற்ற ஆலோசனை நடந்து வருகிறது.

இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை நேரில் அழைத்து ஐவர் அணியினருடனான தொடர்பு, பணம் ெகாடுத்த விவரம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இதனால் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.ஓபிஎஸ் அணியினரை கட்டம் கட்ட முடிவு செய்துள்ள ஜெயலலிதா வரும் தேர்தலில் 30 சதவீதம் பெண்களை நிறுத்தவும், புதுமுகங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:
Privacy and cookie settings