தமிழகத்தில் ஓடும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்கள் பொருத்தும் திட்டத்துக்கு போக்குவரத்துத் துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.
மோட்டார் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்தும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மட்டுமே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ள நிறுவனங்கள் வெளியிடும் ஹாலோகிராம் கொண்ட நம்பர் பிளேட்டை மட்டுமே பொருத்த வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டது.
உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டில் வாகன உரிமையாளர் பெயர், விலாசம், வாகனம் வாங்கிய ஆண்டு, தொடர்பு எண் உள்ளிட்ட எல்லா விபரங்களையும் கொண்ட ‘சிப்’ பொருத்தப்பட்டிருக்கும்.
வாகன சோதனையின்போது, இந்த முத்திரையை, 'ரீடர்' கருவி மூலம் சோதனை செய்து, வாகன விவரங்களை பெற முடியும். இதனால் வாகன திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகளை பெருமளவில் குறைக்க முடியும்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் ஓடும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களை பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.
நம்பர் பிளேட்டை வடிவமைப்பது, தயாரிப்பது, பொருத்துவது என 3 பணிகளையும் சேர்த்து செய்யும் நிறுவனத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
டெண்டரில் பங்கேற்க வரும் மே 6-ம் தேதி கடைசி நாளாகும். இறுதியில் நிறுவனங்களை தேர்வு செய்து பணிகள் தொடங்கப்படும்’’ என்றனர்.