வயர்லெஸ் (போன்), ஃபயர்லெஸ் (சமையல்), ஜாப்லெஸ் (இளைஞர்கள்),, ஸ்லீவ்லெஸ் (உடை) என்று அனைத்துமே வாழ்க்கையில் ‘லெஸ்’ஸாகி விட்டது.
அதுவும் ஆட்டோமொபைல் துறையில் ட்யூப்லெஸ், கீ-லெஸ் என்று பெரும்பாலும் லெஸ்தான். இவற்றோடு இப்போது புதிதாக ‘ஏர்-லெஸ் டயரும்’ (airless tyre) சேர்ந்து விட்டது. அதாங்க…. காற்றில்லாத டயர்கள்.
மிகப் பிரபலமான பிரெஞ்சு டயர் கம்பெனியான ‘மிஷ்லின்’ நிறுவனம்தான், புதிதாக காற்றில்லாத டயர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மற்ற சாதாரண வீல்களில் உள்ள அலாய் மற்றும் ஸ்போக்ஸ் மெட்டீரியல்களைப்போல் இல்லாமல், இதில் ‘பாலியுரேத்தேன்’ எனும் மூலப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இது செம ஃப்ளெக்ஸிபிள் ஆகவும், பஞ்சர் போன்ற சேதாரங்கள் ஏற்படாத வண்ணமும் டயரைப் பாதுகாக்கிறது. டயரும் வீலும் தனித்தனியாக இல்லாமல், நடுவில் உள்ள ஒரு ‘ஹப்’ இதை இணைக்கிறது.
இந்த ஏர்லெஸ் டயருக்கு ‘ட்வீல்’ என்று பெயரிட்டு இருக்கிறார்கள். (அதாவது, டயரின் முதல் எழுத்தான T’-யையும், வீலையும் சேர்த்தால் ட்வீல்!) சாதாரண வீல்களைப் போல் இல்லாமல், ‘ஆன்ட்டி ஸ்கிட்’ முறையில்… (வழுக்கும் தன்மை இல்லாமல்) தயாரிக்கப்பட்டிருப்பது இதன் ஸ்பெஷல்.
இந்த ஏர்-லெஸ் ரேடியல் டயர்களில், ஒவ்வொரு பெட்ரோல் பங்க்காக அலைந்து காற்றடிக்க வேண்டியதில்லை; அதனால், வெயில் காலங்களில் காற்று இறங்கும் தொல்லை இல்லை;
மேடு – பள்ளங்களில் பஞ்சராகி நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலைமை இனி இல்லை!’’ என்கிறது மிஷ்லின் நிறுவனம்.
மேடு – பள்ளங்களில் பஞ்சராகி நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலைமை இனி இல்லை!’’ என்கிறது மிஷ்லின் நிறுவனம்.
இப்போதைக்கு ‘ட்வீல்’ இந்தியாவில் இல்லை; வட அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், கிரீன்வில்லி பகுதியில் இதற்கான தொழிற் சாலையை அமைக்கப் போகிறது மிஷ்லின்.