தன்னுடைய ஆரம்பக்காலத்தில் மீடியாக்களுடன் மிக நெருக்கமாக இருந்தவர் அந்த தல நடிகர். நலிவடைந்த பல செய்தியாளர்களுக்கு நிறை உதவிகள் செய்துள்ளார்.
ஒரு பத்திரிகையாளர் இதய ஆபரேஷனுக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது அறிந்ததும் அவருக்கான மொத்த சிகிச்சை செலவையும்...
அதாவது சுமார் 3 லட்சத்தையும் தானே ஏற்றுக்கொண்டார். இது தவிர வெளியே தெரியாத அளவுக்கு பலருக்கும் பல உதவிகள் செய்துள்ளார்.
இப்படியொரு மீடியா ப்ரண்ட்லி ஹீரோவாக இருந்தவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக மீடியாக்களை மதிப்பதே இல்லை.
பத்திரிகையாளர்கள் யாரையும் பார்க்க விரும்புவதும் இல்லை. அவரின் இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன என்று தெரியாதநிலையில், சிலர் அவருக்கு பப்ளிசிட்டி பிடிக்கவில்லை .
அதனால்தான் மீடியாக்க்ளை தவிர்க்கிறார் என்று சொல்லி வருகின்றனர். பப்ளிசிட்டி பிடிக்காதவர் வெளியே தெரியாமல் ஒரு காரியத்தை செய்து வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது சமூகவலைத்தளத்தில் நிறைய ஃபாலோயர்ஸ் உள்ள சிலரை மட்டும் அவ்வப்போது சந்தித்து வருகிறாராம்.
அது மட்டுமல்ல, தன்னைப் பற்றி அடிக்கடி ட்வீட் செய்வதற்காக அவர்களுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையையும் கொடுத்து வருகிறாராம்.
இதனால் அந்த நடிகரை பற்றி டுவிட்டரில் ஆகா ஓகோவென அவரைப் பற்றி பில்ட்அப் கொடுத்து வருகின்றார்களாம்.