நடிகர் அஜித் மகன் ஆத்விக் பிறந்த நாள் !

நடிகர் அஜித் மகன் ஆத்விக் முதல் பிறந்த நாளை பிளக்ஸ் வைத்து, போஸ்டர் ஒட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பிரமாண்டமாக கொண்டாடி வருவதுடன்,
நடிகர் அஜித் மகன் ஆத்விக் பிறந்த நாள் !
‘எங்கள் அண்ணன் மகன் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடாமால் யார் கொண்டாடுவது?’ என கேள்வியும் எழுப்புகிறார்கள் தஞ்சை மாவட்ட ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள். 

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பெரிய நடிகர்களின் பிறந்தநாள் என்றால் அவர்களுடைய தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் செம கொண்டாட்டமாக இருக்கும்.

பிறந்த தேதி வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே பிளக்ஸ் வைத்தும், சுவர் விளம்பரம் எழுதியும் வாழ்த்து தெரிவித்து அதகளப் படுத்துவார்கள். 

எல்லோராலும் ‘தல’ என்று அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் மகன் பிறந்த நாளையும் பிளக்ஸ் வைத்து, போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகின்றனர். 

இதன் மூலம் தலயை போல நாங்களும் வித்தியாச மானவர்கள் என உலகுக்கு காட்டி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள். நடிகர் அஜித் மகன் ஆத்விக் பிறந்த நாள் மார்ச் 2-ம் தேதியான நாளை கொண்டாடப் படுகிறது. 
அதற்கு தஞ்சாவூரில் முக்கிய இடங்களில் ‘குட்டி தல வாழ்க’ என்றும், ‘தங்கமகன்’ என்றும் வாழ்த்து தெரிவித்து மெகா சைஸ் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

அதில் அஜித் – ஷாலினியுடன் ஆத்விக் இருப்பது போல் படமும், கோவில் கோபுரத்தில் சாமி வேடத்தில் அஜித் இருப்பது போலவும் பிளக்ஸ் வைத்துள்ளனர். 

மேலும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்க இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் அஜித் மகள் பிறந்த நாளுக்கும் இதே போன்று போஸ்டர் ஒட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கி தெறிக்க விட்டார்கள். 

இப்போது அதே உற்சாகத்துடன் அவர் மகன் பிறந்த நாளையும் தங்கள் வீட்டு விஷேசம் போல் கொண்டாடு கின்றனர் அவரின் ரசிகர்கள். 

இது குறித்து மாவட்ட அஜித் ரசிகர் மன்றத்தின் பொருளாளர் அஜித் அப்பாஸிடம் பேசினோம். ”நாங்கள் தலயை எப்பவுமே ஒரு தலைவனா மட்டும் பார்ப்பது இல்லை.
நடிகர் அஜித் மகன் ஆத்விக் பிறந்த நாள் !
எங்க கூட பிறந்தவரா தான் பார்க்கிறோம். அவர் நடித்த படம் வெளிவரும் போதே கட் அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என கலக்குவோம். அவரோட பையன் பிறந்த நாள் என்றால் சும்மாவா விடுவோம்.

அதான் களத்தில் இறங்கிட்டோம். நாளை காலை கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் என சிறப்பான ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கோம். 

நாங்க மட்டும் இல்லை, தமிழகம் முழுக்கவே இதே போல் ஏற்பாடு செஞ்சுகிட்டு இருக்கிறார்கள். எங்க அனோஷ்கா பிறந்த நாள் வந்த போதும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினோம். 

இப்ப அவர் பையன் பிறந்த நாளையும் திருவிழா போல் கொண்டாட தயாராகி விட்டோம். ரசிகர்கள் கஷ்டபடக் கூடாது என நினைப்பவர் அஜித். அவர் குடும்பத்தோட எப்பவும் நல்லா இருக்கணும். 
அதான் இந்த ஏற்பாடு” என்றார் உற்சாகமாக. சமூக ஆர்வலர்கள் சிலரோ, ”தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர் அஜித். 

இதுவரை அவர் பிறந்த நாளை மட்டும் கொண்டாடிய அவரது ரசிகர்கள் இப்போது மகள், மகன் பிறந்த நாளையும் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். இதை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் பின்பற்ற தொடங்கி விடுவார்கள். 

உடனே அஜித், தனது ரசிகர் மன்றத்தை கலைத்தது போல் இது போன்ற செயல்களுக்கும் தடை விதிக்க வேண்டும். அது தான் அஜித் தன் ரசிகர்களுக்கு செய்யும் உதவி. அவர்களுடைய வாழ்கைக்கும் நல்லது என்றனர்.
Tags:
Privacy and cookie settings