ஆந்திர சட்டசபையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏவும், முன்னாள் நடிகையுமான ரோஜா மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்களை அவதூறாக பேசியதாக நடிகையும், எம்.எல்.ஏவுமான ரோஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஹைதராபாத் கோர்ட், ரோஜாவின் சஸ்பெண்ட்டிற்கு தடை விதித்தது.
இதனையடுத்து ரோஜா நேற்று சட்டசபைக்கு சென்றார். ஆனால் கோர்ட் உத்தரவை ஏற்க மறுத்து, ரோஜா சட்டசபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றும் ரோஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சட்டசபை முன் அமர்ந்து ரோஜா தர்ணா போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து ரோஜா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.