ஹேங் ஓவர் இல்லாத மதுபானம் !

0 minute read
மது அருந்தினால் ஏற்படும் ஹேங் ஓவர் பிரச்னையில் குடிப்பவர்கள் சிக்கிக் கொள்ளாத வகையில், வடகொரியா புதுவகை மதுவைக் கண்டு பிடித்துள்ளது. 
 


அணுசக்தி ஆராய்ச்சி, ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு என்று ஆயுத தயாரிப்பில் பரபரப்பாக இருக்கும் வடகொரியா,

மது தயாரிப்பிலும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சவால் விட்டுள்ளது. 

வடகொரியாவின் அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள், அதிக போதையைக் கொடுத்து மூளை செயல்பாட்டை கட்டுப்படுத்தும்

மது வகைகளுக்கு மாற்றாக மிகக் குறைந்த ஆல்ஹகால் அளவுள்ள மதுவைத் தயாரித்துள்ளது. 

இந்த மதுபானத்தை குடித்தால் தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படாது


என்றும் வடகொரியாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

இந்தப் புது வகை மதுவின் பெயர் கோர்யோ. அதிகளவில் மருத்துவ குணங்கள் கொண்ட ‘கெசோங் கோர்யோ இன்சாம்’ என்ற

மூலிகை, ஈரமில்லாத அரிசி ஆகிய வற்றைக் கொண்டு இந்த ‘கோர்யோ’ மது தயாரிக்கப் படுகிறது.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings