சுவிஸில் சொந்த மகள்களையே துஷ்பிரயோகம் செய்த பெற்றோர் !

சுவிட்சர்லாந்தின் vaud மாகாணத்தில் சொந்த மகள்களையே பெற்றோர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சுவிட்சர்லாந்தின் vaud மாகாணத்தில் குடியிருந்து வரும் இந்த குடும்பத்தினர் மீது, அவர்களின் அண்டை வீட்டர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் அவர்களது குடியிருப்பை சோதனையிட்ட விசாரணை அதிகாரிகள், அங்கிருந்து பாலியலை தூண்டும் ஏராளமான புகைப்படங்களை கண்டெடுத்துள்ளனர். 

இதில் அவர்களது முதிர்ந்த வயது மகளது அரை நிர்வாணப் புகைப்படவும் இருந்ததாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். 

முதியவர்களான அந்த இருவரும் தங்களது இரு மகள்களுக்கு முன்பு வைத்து பாலியல் உறவு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

பாலியலில் அதிக நாட்டம் கொண்ட அந்த ஜோடி, வீட்டின் மொட்டைமாடி, அவர்களது வாகனம், படுக்கை அறை என அனைத்து இடங்களிலும் உறவு வைத்துள்ளனர். 

தற்போது 23 வயதாகும் இவர்களது மகள் ஒருவர், இதுகுறித்து தெரிவிக்கையில், தனக்கு இது மிகவும் அதிர்ச்சிதரும் நிகழ்வாகவே இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 தனக்கு 11 வயது இருக்கும்போதே இந்த நிகழ்வுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் வேறு உறவினர் வீட்டுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
தற்போது இந்த ஜோடியுடன் வாழ்ந்துவரும் இவர்களது இன்னொரு மகளையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்தே இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

ஆனால் 8 வயதான அந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகவில்லை என மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது. 

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளவும், பெற்றோரின் ஒழுக்கக்கேடான நடவடிக்கையால், அந்த மகள்கள் இருவரும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால், 

அவர்களின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இருவருக்கும் குறைந்தது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings