நல்ல படைப்புகளை வழங்க உற்சாகம் கிடைத்துள்ளது தனுஷ் !

1 minute read
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பதால் 3 மடங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.
நல்ல படைப்புகளை வழங்க உற்சாகம் கிடைத்துள்ளது தனுஷ் !
63வது தேசிய விருதுகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் படம், சிறந்த உறுதுணை நடிகர் மற்றும் சிறந்த எடிட்டிங் என 3 விருதுகள் வென்றது 'விசாரணை' திரைப்படம்.

3 தேசிய விருதுகள் வென்றிருப்பது குறித்து தயாரிப்பாளர் தனுஷ், சில படைப்புகளை துவங்கும் போது நமக்கே தெரியும், இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. 

அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற விசாரணை.
நான் விசாரணை திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திரகனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும், மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும்.

இதை போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுகொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும், 
மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்சாகத்தையும் தருகின்றது என்று தனுஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings