வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றிய பெண் !

அனிதா என்ற இளம்பெண் வேலை வாங்கி தருவ தாகவும் கவர்ச்சி கரமான பேச்சின் மூலமாகவும் பலரை ஏமாற்றி உள்ளது தற்போது அம்பலமாகி யுள்ளது. 
அருப்புக்கோட்டையை சேர்ந்த அனிதாவுக்கு பி.சி.ஏ. 2ம் ஆண்டு படித்தபோது மார்க்கெட்டிங் மேலாளராக இருந்த குமாருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, சென்னையில் குடியேறியுள்ளனர்.

இந்நிலையில் அனிதா, சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம் என்று குமாரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதிக்க கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்துள்ளார் குமார். 

அதை அருப்புக்கோட்டைக்கு கொண்டு சென்று 6 மாதம் காலம் அங்கேயே தங்கிய அனிதா, குமாரிடம், சூப்பர் மார்க்கெட் பணிகள் நடந்து வருவதாக அவ்வப்போது தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், 6 மாதம் கழித்து அருப்புக்கோட்டைக்கு சென்ற குமார் அங்கு சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்கான எந்தப்பணிகளும் நடக்காததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதுகுறித்து அனிதாவிடம் ஏற்பட்ட தகராறு சமரசம் ஆனதை அடுத்து இருவரும் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளனர். பின்னர் மீண்டும் இருவர் இடையே அடிக்கடி சண்டை வந்ததால், 2010ல் சேலையூர் காவல் நிலையத்தில் குமார் மீது புகார் கொடுத்துள்ளார். 

பின்னர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சுரேஷ் என்பவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

தன்னுடைய கவர்ச்சிகரமான பேச்சின் மூலம், ஆடம்பரமாக வாழ விரும்பிய அனிதா பொது இடங்களில் நின்று கொண்டு இளைஞர்களுக்கு வலைவீசியுள்ளார். 

அப்போது தன்னை ஐடி நிறுவனத்தில் வேலைப்பார்ப்பதாக அறிமுகப்படுத்திய அவர், ‘நீங்கள் படித்த படிப்புக்கு எங்கள் கம்பெனியில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன்’ என்று பேசி ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். 

சென்னையில் மழை வெள்ளத்தால் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதை பயன்படுத்திக் கொண்ட அனிதா, அவசரப் படுத்தியவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அனிதாவிடம் ஏமாந்த மலையரசன் மற்றும் சில வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அப்போது விசாரணையில், தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிய அனிதாவிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து அவரது லேப்டாப்பில் மோசடி செய்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

இதையடுத்து அனிதாவுடன் மோசடிக்கு உதவியாக இருந்த அவரது கணவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனிதா, தனது முதல் கணவர் குமாரைக் பொலிஸில் சிக்க வைத்து அவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற நீதிமன்றத்தில் முயற்சித்து வந்துள்ளார். 

அனிதா குறித்த முழு தகவல்களும் அவரை கைது செய்த பிறகே குமாருக்கு தெரியவந்துள்ளது. அனிதா வழக்கில் தோண்ட தோண்ட பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன என பொலிசார் தெரிவித்துள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், அனிதா பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அதன் மூலமாக மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய அழகில் மயங்கியவர்கள் லட்சக்கணக்கான பணத்தை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர். 

வேலைவாங்கித் தருவதாகவும், திருமணம் செய்தும் பலரை அனிதா ஏமாற்றியுள்ளார். இதற்காக அவரது கையில் எப்போதும் தாலிச் செயின் ஒன்றை வைத்திருந்துள்ளார்.

அனிதாவுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் அந்த தாலிச் செயினை கொடுத்து இதை என்னுடைய கழுத்தில் கட்டினால் சந்தோஷமாக இருக்கலாம். இல்லையெனில் பல பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். 

ஏனென்றால் இந்த செயின் கேரளாவில் உள்ள மந்திரவாதிகள் மாந்திரீகம் செய்து கொடுத்தது என்று சொல்லியே பலரை அனிதா ஏமாற்றியுள்ளார் என தெரிவித்துள்ளனர். 

பொலிசார் மேலும் கூறுகையில், அனிதாவை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே எத்தனை பேர் அவரிடம் ஏமாந்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவரும். 

அனிதா, ஏராளமான ஆண்களுடன் நெருங்கி போஸ் கொடுத்த புகைப்படங்களை கைப்பற்றி உள்ளோம். மேலும், சிலரை ரகசியமாக திருமணமும் செய்து இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings