ஒரு படத்தால் வந்த குடும்ப சண்டை !

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி சையிப் அலிகான்- கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
ஒரு படத்தால் வந்த குடும்ப சண்டை !
அதிலும் இப்படித்தான் நடிப்பேன் என்றில்லாமல் எந்த மாதிரியான காட்சிகள் என்றாலும் துணிந்து நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவரும், அர்ஜுன் கபூரும் நடித்த கி&கா படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. இதில் பல முத்தக்காட்சிகள் இடம் பெற்றது. 

இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு ஒரு நாள் அர்ஜுன் கபூர், கரீனா கபூருக்கு தொலைப்பேசியில் அழைத்துள்ளார். 

அப்போது அதை யதார்த்தமாக பார்த்துள்ள சையிப் அலிகான், என்ன தான் வேலை சம்மந்தமாக இருந்தாலும், இந்த நேரத்தில் எப்படி நீ போன் செய்யலாம் என அர்ஜுன் கபூரை வெளுத்து வாங்கியுள்ளார். 
இந்த செய்தி எப்படியோ பாலிவுட் மீடியாக்களுக்கு தெரிய வர, தற்போது வட இந்திய சினிமாவில் இது தான் ஹைலைட். 

மேலும், ஒரு சிலர் வழக்கம் போல் இதுவும் படத்தின் விளம்பரத்திற்காக செய்யும் ட்ராமா தான் எனவும் சிலர் கூறுகின்றனர்.
Tags:
Privacy and cookie settings