அம்மாவைத் தேடி அழுத குழந்தை கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை !

1 minute read
டெல்லியில் அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை தந்தையே ரொட்டிக் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தலைநகர் டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வரும் ரிக்‌ஷா தொழிலாரி நரிஸ் ஷேக் (28). 

இவருக்கு பிர்தவுஸா பேகம் என்ற மனைவியும், ராகுல் (9), சவுரயா(2) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். 

இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாட் நரிஸ். அப்போது குழந்தை சவுரயா அழுதுள்ளார். 

இதனால் தூக்கம் கலைந்த நரிஸ், குழந்தையைச் சமாதானப்படுத்த மனைவியைத் தேடியுள்ளார். 
ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த நரிஸ், அழுகையை நிறுத்தும்படி குழந்தையை மிரட்டி அடித்துள்ளார். 

ஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் மேலும் கோபத்தில் ரொட்டிக் கட்டையால் குழந்தையை சரமாரியாக நரிஸ் அடித்துள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த சவுரயா, பரிதாபமாக உயிரிழந்தது. இந்தக் காட்சிகளை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல், ஓடிச்சென்று அக்கம்பக்கத்தாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். 
விரைந்து வந்த அக்கம் பக்கத்தார், நரிஸுக்கு தர்மாடி கொடுத்து, அவரைப் போலீசில் ஒப்படைத்தனர். 

நரிஸ் மீது, கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சவுரயாவின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings