காதல் விவகார த்தால் மன முடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
தெலுங்குத் தொலைக் காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப் பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா.
செகந்திரா பாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கி யிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக் காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத் தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்த நிரோஷாவின்
இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத் திரை வட்டார த்தை அதிர்ச்சி அடையச் செய்தது.
இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக் காட்சியில், பத்திரிக்கை யாளராக பணி யாற்றிய நிரோஷா, அண்மையில் தான் ஜெமினி டிவியில் தொகுப்பா ளராக சேர்ந்தார்.
நிரோஷாவின் காதலர் பெயர் ரித்விக் என்றும், அவர் கனடாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்தமாதம் நிரோஷாவிற்கு திருமணம் நடைபெற இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலை யில் தான் திடீரென தற்கொலை முடிவை நாடியு ள்ளார் நிரோஷா. நிரோஷா வின் இந்த துயர முடிவிற்குக் காரணம் காதல் விவகாரம் தான் எனக் கூறப் பட்டது.
தற்போது அதனை நிரூபிப்பது போல், தனது காதலருடன் ஸ்கைப் மூலம் வீடியோ காலில் பேசியவாறே, நிரோஷா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
அதோடு, கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்தில் இருந் துள்ளார் நிரோஷா. அதே மனநி லையில் நேற்று முன் தினம் இரவு தனது காதலருடன் வீடியோ கால்’ மூலம் பேசி உள்ளார் நிரோஷா.
அப்போது தனது காதலரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தெரிவித் துள்ளார். அதோடு, சொன்ன படி தூக்கிட்டும் அவர் தற்கொலை செய்து கொண் டுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த அவரது காதலர் உடனடியாக நிரோஷா வின் பெற்றோருக்கும், அவர் தங்கி யிருந்த விடுதிக்கும் தகவல் கொடுத் துள்ளார்.
பின்னர் விடுதி ஊழியர்கள் நிரோஷா வின் அறைக் கதவை தட்டியும் திறக்கா ததால், போலீசாரின் உதவியுடன் அறைக் கதவை உடைத்து, அவரது சடலத்தை மீட்டு ள்ளனர்
இது குறித்து ராம்கோபால் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, நிரோஷா வின் செல்போன் அழைப்பு களை அடிப்படை யாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்