தண்டனையில் இருந்து தப்பிக்க கைதியின் விசித்திர திட்டம் !

வியட்நாம் நாட்டில் பெண் சிறைக்கைதி ஒருவர் மரண தண்டனையில் இருந்து தப்ப செயல்படுத்திய விசித்திர திட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தண்டனையில் இருந்து தப்பிக்க கைதியின் விசித்திர திட்டம் !
வியட்நாம் நாட்டில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 28 நபர்கள் கொண்ட கும்பலை பொலிசார் கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு அனைவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதில் தண்டனைக்கு உள்ளான 42 வயது Nguyen Hue என்ற பெண்மணி தமக்கு பொது மன்னிப்பு வழங்க வலியுறுத்தி நீதிமன்றம் மட்டும் அரசினை நாடியுள்ளார்.

இந்த விசாரணையின் தீர்ப்பு கடந்த ஆண்டு வெளி வந்தது, அதில் அவருக்கு பொது மன்னிப்பு மறுக்கப்பட்டதுடன், மரண தண்டனையை உறுதியும் செய்தனர்.

இந்த நிலையில் வியட்நாம் நாட்டின் சட்டத்தில் இருக்கும் சலுகையை பயன்படுத்தி, அந்த பெண்மணி விசித்திர திட்டமொன்றை செயல்படுத்தியுள்ளார்.
வியட்நாம் நாட்டில் 3 வயதுக்கும் கீழ் வயதுடைய குழந்தையின் தாயாருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்க முடியும். 

இந்த சலுகையை பயன்படுத்தி, 27 வயது கை ஒருவருக்கு 1600 பவுண்டு விலை தந்து அவரது விந்தணுவை தானமாக பெற்றுள்ளார்.

அந்த விந்தணுவை பயன்படுத்தி தற்போது கருத்தரித்துள்ள இவர், அடுத்த சில மாதங்களில் குழந்தையை பெற்றெடுக்கலாம் என கூறப்படுகிறது. 

இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறை அதிகாரிகள் அங்குள்ள 4 காவலர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings