ஒரே கரு முட்டையில் பிறந்த இரட்டை குழந்தைகள் !

இங்கிலாந்தை சேர்ந்தவர் லிப்பி ஆப்பிள்பி (37). இவருக்கு கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் துர்காம் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
ஒரே கரு முட்டையில் பிறந்த இரட்டை குழந்தைகள் !
2 குழந்தைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால் பிறந்த இரட்டையரில் ஒரு குழந்தை கருப்பு நிறத்திலும், மற்றொரு குழந்தை வெள்ளை நிறத்திலும் இருந்தன.

தோல் மட்டுமின்றி கண்களின் நிறமும் இருவருக்கும் மாறுபட்டு இருந்தது. இதனால் டாக்டர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இந்த இரட்டை குழந்தைகள் ஒரே கருமுட்டையில் பிறந்துள்ளன.

இக்குழந்தைகளின் தாய் லிப்பியும், தந்தை தபாட்ஷ்வா மட்ஷிம் பமுடோவும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்.

அப்படி இருக்கும் போது ஒரே கரு முட்டையில் உருவான குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் பிறந்து இருப்பது அறிவியலில் நடந்த அதிசயமாக கருதப்படுகிறது. 

நச்சுக் கொடியை ஆய்வு செய்ததில் இந்த இரட்டை குழந்தைகள் ஒரே உயிரணுவில் பிறந்தவை அல்ல என்றும், 100 சதவீதம் அடையாளம் காணக் கூடிய இரட்டையர்கள் என்றும் தெரிய வந்தது.
கரு முட்டை வளர்ச்சியின் போது ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக உடல் மற்றும் கண்களின் நிறம் மாறுபட்டதாக கருதப்படுகிறது. 

இவர்கள் இங்கிலாந்தின் முதல் கருப்பு மற்றும் வெள்ளை நிற இரட்டையர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். 

தற்போது இவர்களுக்கு ஒரு வயது ஆகிறது. அக்குழந்தைக்கு அமெலியா, ஜாஸ்மின் என பெயரிட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings