பெண்கள் இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது, இப்படி உடை உடுத்த வேண்டும் அப்படி உடை உடுத்த வேண்டும் என பத்தம்சக் கோட்பாடுகள் மட்டும் தான் இன்னும் வெளியாகவில்லை.
அந்த அளவிக்கு பெண்களுக்கு அட்வைஸும், அடக்குமுறையும் அதிகரித்து விட்டன. இதற்கு ஏதிராகப் பலரும் பலவிதமாகக் கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது லட்சுமி மேனன் தனது முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதற்கு சரியான புகைப்படங்களாக அமைந்துள்ளது அவை.
யாரோ இந்தப் பதிவை என் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர்... எவ்வளவு தைரியம் எனக் கேட்டுள்ளார் லட்சுமி மேனன். புகைப்படங்களும் அதன் அர்த்தங்களும்.
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால் அது வாய்ப்பல்ல , அது ஒரு பொறுப்பு உங்கள் மகளிடம் பாதுகாப்பு குறித்து பேசும் அதே தருணம் உங்கள் மகனிடம் அப்படியே சத்தியம் வாங்குங்கள்
(அவனால் பெண்களுக்கு எந்த பாதிப்பும் வராது என) என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.
என் மனம் சொல்லும் படி கேட்டு எனக்கு பிடித்தாற் போல் நடக்கிறேன் அதற்காக நான் பிரச்னையை உருவாக்கும் கிளர்ச்சியாளர் என அர்த்தம் அல்ல.
என்னால் ஜீன்ஸ், ஷர்ட் அணிய முடியும், என் கூந்தலை குட்டையாக வெட்டிக்கொண்டு ஒரே கல்பில் ஒயின் குடிக்க முடியுமெனில் நான் எனது கோட்டைத் தாண்டுகிறேன் என அர்த்தமில்லை.
இப்படி சில வாசகங்களைத் தாங்கிய பெண்களின் அந்தப் புகைப்படம் பெண்களும், ஆண்கள் போல் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஆறறிவு உள்ளது. வகுப்பெடுக்க அவசியம் அல்ல என்பதை உணர்த்துகிறது.