தேர்தலில் தனித்து போட்டியி டுவதாக தேமுதிக அறிவித் துள்ளது அக்கட்சியின் உரிமை. அவர்கள் உரிமையில் தலையிட நாங்கள் விரும்ப வில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,
சென்னையில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டத்தில் அறிவித் திருந்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவ ர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளிக் கிழமை காலை சென்னை கோபால புரத்தில் செய்தியாளர் களிடம் ஸ்டாலின் கூறியதாவது: திமுக கூட்டணிக்கு வரலாம் என்று தேமுதிகவுக்கு கருணாநிதி அழைப்பு கொடுத் திருந்தார்.
கூட்டணிக்கு வருவதாக இருந்தால் வரலாம் என்ற நல்ல எண்ணத்துடன் விடுக்கப்பட்ட அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வது, ஏற்றுக் கொள்ளாதது என்பதெல்லாம் அவர்களுடைய உரிமை. அவர்களுடைய உரிமையில் நாங்கள் தலையிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.