லண்டனில் விற்கப்படும் ஆயிரக்கணக்கான தோலை வெண்மையாக்கும் கிரீம்களில் உடல் உறுப்புகளை செயலிழக்கச் செய்யும் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறிந்துள்ளது.
இத்தகைய கிரீம்களில் இருக்கும் வேதிப்பொருட்களின் விவரங்கள் அவற்றின் மேலட்டைகளில் குறிப்பிடப்படவில்லை.
இதனால் இந்த கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து குறித்து பரவலாக தெரிவதில்லை. இந்த கிரீம்களில் ஹைட்ரோகுய்னான் என்கிற ஆபத்தான வேதிப்பொருள் இருக்கிறது.
ஐரோப்பாவில் இது தடை செய்யப்பட்ட வேதிப்பொருள். காரணம், அது தோல் பிரச்சனைகளையும் அதை விட மோசமான உடல்நல ஆபத்துக்களையும் உண்டாக்கவல்லது.
ஆனால் லண்டன் முழுக்க இந்த வேதிப்பொருள் கலந்த கிரீம்களை பலர் சட்ட விரோதமாக வாங்குகிறார்கள்.
பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டு லண்டனில் விற்கப்படும் ஒரு சோப்பில் பாதரசம் இருப்பதாக உள்ளூர் கவுன்சில் செய்த பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த சோப்பை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருக்கும் பாதரசம் படிப்படியாக உடலில் சேர்ந்து சிறுநீரகம்,
ஈரல் மற்றும் மூளையை சேதப்படுத்தும். லண்டன் கடைகளில் வாங்கிய நான்கு கிரீம்களில் மூன்றில் ஹைட்ரோகுய்னான் என்கிற ஆபத்தான, தடை செய்யப்பட்ட வேதிப்பொருள் இருந்தது பரிசோதனையில் தெரிந்தது.
சட்டத்தை மீறி லண்டனில் பல கடைகள் இத்தகைய கிரீம்களை விற்கின்றன.
காரணம் இதை வாங்க வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு அதன் ஆபத்து தெரியாமல் இருக்கக்கூடும்.