கபாலி வெளியீடு எப்போது? இயக்குநர் ரஞ்சித் !

1 minute read
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கபாலி' படத்தை மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியிடும் நோக்கில் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறோம் என்று இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கபாலி வெளியீடு எப்போது? இயக்குநர் ரஞ்சித் !
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மும்முரமாக நடைபெற்றது. படக்குழுவினர் சிலர் தங்களது சமூக வலைதளத்தில் 'கபாலி' படப்பிடிப்பு முடிவுற்றதாக தெரிவித்திருந்தார்கள். 

இந்நிலையில், 'கபாலி' படப்பிடிப்பு எவ்வளவு இருக்கிறது, என்ன பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, எப்போது வெளியீடு என்பது குறித்து இயக்குநர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.

இது குறித்து இயக்குநர் ரஞ்சித் அளித்துள்ள வீடியோ பேட்டியில் ரஜினி சாரின் ஒத்துழைப்பால் மிகவும் சீக்கிரமாகவே இப்படத்தை முடித்திருக்கிறோம்.

இன்னும் 3 முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இருக்கிறது. தற்போது எடிட்டிங் பணிகள் போய் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் முதல் டப்பிங் பணிகளைத் துவங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். 
டப்பிங் பணிகள் துவங்கியவுடன் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு பணிகள் குறித்து முடிவு செய்வோம். ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் படம் அமையும். எங்களுக்கே ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. 

அதனை படம் பார்க்கும் ரசிகர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன். மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் படத்தை வெளியிடும் நோக்கில் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறோம். 

பிரதான படப்பிடிப்பு என்பதை முடித்து விட்டோம். அந்த 3 முதல் 4 நாட்கள் என்பது சிறுசிறு காட்சிகள் மட்டுமே என்று தெரிவித்திருக்கிறார்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings