போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள் !

ஈன்ற பொழுதின் பெரி துவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்டதாய்.


குழந்தை பிறக்கும் போது ஒரு தாய் அடையும் சந்தோஷத்தை விட அந்த மகன் நல்லவன்

என்று பிறர் பாராட்டும் போது தாய் படும் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது.

இப்படி நல்லவனாய் இந்த உலகில் வலம் வருவான் என அனைத்து பெற்றோர் களும் கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.

பள்ளிக்கு செல்லும் மகன் பள்ளியில் ஒழுக்கமாக இருந்து படிப்பை படித்து வருவான் என எதிர்ப் பார்ப்புடன் தாய் வீட்டில் காத்து இருப்பார். 

ஆனால் தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள் சிலர் படிப்பை படிக்கிறார் களோ இல்லையோ, போதையை படித்து விடுகிறார்கள்.

கடந்த காலங்களில் திருமணம் ஆனவர்கள் மது குடிப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். 

அந்த நிலைமாறி கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என படிப்படியாக

போதைக்கு அடிமையாகும் நிலை தற்போது உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இது இந்த சமுதாயம் வருத்தப்படும் செயலாக உள்ளது. டாஸ்டாக் கடைகளில் குடிமகன் களுக்கு

நிகராக மது வகைகளை வாங்கும் மாணவர் களின் படங்கள் சமூக வலை தளங்களில் பரவிக்கொண்டு இருக்கிறது. 

தன்மகன் நல்லவனாக வருவான் என ஏக்கத்துடன் காத்திருக்கும் பெற்றோர்கள்,

இந்த செயலை அறியும் போது வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் சென்று விடுகிறது.


தற்போது சில மாணவர்கள் ஒன்று சேர்ந்தாலே மது பார்டிக்கு ஆயத்தம் ஆகிவிடு கிறார்கள். 

போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் சிலர், ேபாதிய பணம் இல்லாமல் சைக்கிள் களுக்கு

பஞ்சர் ஒட்டும் பசையை போதை பொருளாக தயாரித்து பயன்படுத்தி கொள்கின்றனர்.

இதை உபயோகம் செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக குமரி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. 

தற்போது இந்த செயல் வைரஸ் போல் வேகமாக பரவி வருவது அனை வரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர் கோவிலில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்களில் சிலர் மது குடித்து விட்டு சாலையில் ஆட்டம் போட்டனர்.

சில மாணவர்கள் போதை மயக்கத்தில் சாலை ஓரத்தில் படுத்து கிடந்தனர்.

இதனால் அந்த வழியாக சென்ற பொது மக்கள் முகம் சுழித்துக் கொண்டு சென்றனர்.

இது குறித்து ஒரு ஆசிரியர் கூறியதாவது: 

தற்போது மாணவர் களின் செயல் வரை முறையை மீறி சென்று ெகாண்டு இருக்கிறது. 

கடந்த காலங்களில் மாணவர்கள் ஆசிரியர் களுக்கு உரிய மரியாதை தந்தார்கள்.

மேலும் பயந்தும் இருந்தார்கள். தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.

மாணவர் களை பார்த்து ஆசிரியர்கள் பயப்படும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. 

கடந்த காலங்களில் படித்துவராத மாணவர் களை ஆசிரியர்கள் தண்டிப் பார்கள்,


அதோடு அவர்களுக்கு ஒழுக்க த்தையும் படித்துக் கொடுத்தார்கள். இதனால் மாணவர்கள் படிப்போடு, ஒழுக்க த்தையும் படித்தனர். 

ஆனால் தற்போது மாணவர் களை தண்டித்தால், ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்யப் படுகிறது.

மேலும் மாணவர் களால் பல ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து படிப்பை மட்டும் சொல்லிக் கொடுத்து விட்டு செல்கிறார்கள். 

இதனால் மாணவர்கள் ஒழுக்கம் தவறும் செயல் நடக்கிறது. முன்பு மாணவர்கள் டாஸ்மாக் பக்கமே செல்ல தயங்கினார்கள்.

ஆனால் தற்போது மாணவர்கள் சர்வ சாதாரணமாக டாஸ்மாக் படியை மிதிக்கிறார்கள். 
பள்ளிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கை களை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

பள்ளிக்கு அடிக்கடி வந்து மாணவர் எப்படி படிக்கிறார்கள் என பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அதுபோல் தேவைக்கு மீறி பணம் கொடுத்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.


குழந்தை களுக்கு தேவைப்படும் நல்ல விஷயங் களை நாம் அறிந்து அவர்களுக்கு செய்துகொடுக்க வேண்டும். 

பரபரப்பாக சுற்றிக் கொண்டு இருக்கும் இந்த உலகில் வேலையில் மட்டும்

நமது முழு கவனத்தை செலுத்தாமல் குழந்தைகளின் நலனிலும் தினமும் கவனம் செலுத்த வேண்டும். 

இதனால் திசைமாறும் மாணவர் களை நம்வழிக்கு கொண்டு வரலாம்.

மாணவரை எந்த ஆசிரியரும் வேண்டு மென்று தாக்குவது கிடையாது. 

இதனால் மாணவர் களை தண்டிக்கும் உரிமையை ஆசிரியர் களுக்கு இந்த அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings